இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் 15 ம் தேதி நடக்க உள்ள நிலையில், டிக்கெட் விலை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியா வந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் 3 டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி, ஹைதராபாத்தில் இன்று தொடங்க உள்ளது.
முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் 15-ம் தேதி நடக்க உள்ளது. நீண்ட நாளுக்கு பிறகு சென்னையில் இந்திய அணி விளையாடும் போட்டி நடக்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 8-ம் தேதி தொடங்குகிறது. குறைந்தபட்சம் ரூ.1200 ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படவுள்ளது.
1200, 2400, 4800, 6500,12000 ரூபாய் ஆகிய தொகைகளுக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 8ம் தேதி மைதானத்தில் உள்ள கவுண்டர்களில் காலை 10.30 மணிக்கு விற்பனை தொடங்குகிறது
ஆன்லைன் முறையிலும் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். Paytm மற்றும் insider ஆகிய தளங்கள் மூலமாக முன்பதிவு செய்யலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.