முகப்பு /செய்தி /விளையாட்டு / தவான், ஸ்ரேயஸ் ஐயர், ருதுராஜ், சைனி உட்பட இந்திய அணியில் 7 பேருக்கு கொரோனா தொற்று- சிக்கலில் மே.இ.தீவுகள் தொடர்?

தவான், ஸ்ரேயஸ் ஐயர், ருதுராஜ், சைனி உட்பட இந்திய அணியில் 7 பேருக்கு கொரோனா தொற்று- சிக்கலில் மே.இ.தீவுகள் தொடர்?

அய்யர், தவான் உட்பட 7 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்

அய்யர், தவான் உட்பட 7 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக இந்தியா கடுமையான அடியைச் சந்தித்துள்ளது, நான்கு வீரர்கள் உட்பட ஏழு பேர் கோவிட் -19 தொற்று ஏற்பட்டு விலக நேரிட்டுள்ளது. வீரர்கள் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி.

மேலும் படிக்கவும் ...
  • Cricketnext
  • 1-MIN READ
  • Last Updated :

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக இந்தியா கடுமையான அடியைச் சந்தித்துள்ளது, நான்கு வீரர்கள் உட்பட ஏழு பேர் கோவிட் -19 தொற்று ஏற்பட்டு விலக நேரிட்டுள்ளது. வீரர்கள் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி.

மற்ற மூவரும் துணைப் பணியாளர்கள் ஆவார்கள். பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப், பாதுகாப்பு தொடர்பு அதிகாரி பி லோகேஷ் மற்றும் விளையாட்டு மசாஜ் தெரபிஸ்ட் ராஜீவ் குமார். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில் தொடக்க வீரர் மயங்க் அகர்வாலை ஒருநாள் அணியில் சேர்த்துள்ளதாகக் கூறினார்.

ஜனவரி 31 அன்று அகமதாபாத்தில் வந்திறங்கிய இந்திய அணி மூன்று RT-PCR சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அனைத்து கொரோனா பாசிட்டிவ் முடிவுகளும் வெளிவந்தன என்று பிசிசிஐ கூறியது. ஜனவரி 31 அன்று நடந்த முதல் சுற்று சோதனைக்குப் பிறகு தவான் மற்றும் சைனி பாசிட்டிவ். அதே நாள் ஜனவரி 31-ல் கெய்க்வாடுக்கு பாசிட்டிவ். அதே நேரத்தில் ஐயர் மற்றும் ராஜீவ் ஆகியோருக்கு மூன்றாவது சுற்று சோதனையின் போது புதன்கிழமையன்று கொரோனா பாசிட்டிவ் ஆனது.

பிசிசிஐ மருத்துவக் குழு கொரொனா பாசிட்டிவ் விவகாரங்களைக் கையாண்டு வருகிறது, அவர்கள் பூரண குணமடையும் வரை தனிமையில் இருப்பார்கள். பிசிசிஐ தற்போது நிலைமையை கண்காணித்து வருகிறது, விரைவில் மாற்று வீரர்களை அறிவிக்கும். இந்தியா மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

Also Read: யாஷ் துல் 110, ரஷீத் 94, யு-19 உலகக்கோப்பை இறுதியில் இந்திய இளம்படை- ஆஸ்திரேலியாவை நொறுக்கியது

இந்த தொடருக்கு ஸ்டாண்ட் பையாக இருக்கும் எம் ஷாருக்கான், ஆர் சாய் கிஷோர், ரிஷி தவான் ஆகியோர் இப்போது அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் ஷர்மாவின் தொடக்க ஜோடியைப் பொறுத்தவரை, டி20 அணியில் சிறப்பு தொடக்க ஆட்டக்காரரான வெங்கடேஷ் ஐயரை முயற்சி செய்யலாம்.

First published:

Tags: India vs west indies, Shikhar dhawan, Shreyas Iyer