முகப்பு /செய்தி /விளையாட்டு / தோனியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான்

தோனியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான்

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

ஷிகர் தவான் தோனியின் சாதனை ஒன்றை சமன் செய்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :

போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ஷிகர் தவான் புதன்கிழமை தனது 37வது அரைசதத்தை விளாசினார். அவர் 23வது ஓவரில் ஹெய்டன் வால்ஷிடம் ஆட்டமிழக்கும் முன், சகவீரர் ஷுப்மான் கில்லுடன் 113 ரன் தொடக்கக் கூட்டணி அமைத்தார், இந்த பார்ட்னர்ஷிப்பில் ஷிகர் தவான் தோனியின் சாதனை ஒன்றை சமன் செய்தார்.

தவான் 74 பந்துகளில் 7 பவுண்டரிகள் உதவியுடன் 58 ரன்கள் எடுத்தார்.தவான் முதல் ஓவரிலேயே ஜேசன் ஹோல்டருக்கு எதிராக கவர்-பாயின்ட் நோக்கி ஒரு பவுண்டரியுடன் தனது கணக்கைத் தொடங்கினார் ஓட்டங்கள் இடையில் சிறிது தொய்ந்தன, ஆனால் அவர் ஹோல்டரின் மூன்றாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்து மீண்டும் வேகத்தை பெற்றார்.

61 பந்துகளில் தனது 37வது ஒருநாள் அரை சதத்தையும், இந்தத் தொடரில் இரண்டாவது அரை சதத்தையும் எட்டினார். இந்த சாதனையின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் அதிகபட்ச அரைசதங்கள் அடித்த சாதனையை தவான் சமன் செய்தார். அதாவது ஆசியாவுக்கு வெளியே 29 அரைசதங்கள் என்ற சாதனையை ஷிகர் தவான் சமன் செய்தார்.

ஆசியாவுக்கு வெளியே அதிக அரைசதங்கள்- விராட் கோலி முதலிடம்:

கோலி - 49

சச்சின் - 48

ராகுல் திராவிட் - 42

கங்குலி -38

ரோஹித் சர்மா -36

தோனி - 29

ஷிகர் தவான் - 29

First published:

Tags: MS Dhoni, Shikhar dhawan