IND vs WI, 2nd T20I:விராட் கோலியை உட்கார வைத்து ஷ்ரேயஸ் அய்யரை கொண்டு வரவேண்டும்- இன்று 2வது T20 போட்டி
IND vs WI, 2nd T20I:விராட் கோலியை உட்கார வைத்து ஷ்ரேயஸ் அய்யரை கொண்டு வரவேண்டும்- இன்று 2வது T20 போட்டி
Ind vs WI 2nd odi, விராட் கோலி இருப்பாரா?
கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெறும் 2வது ஒருநாள் போட்டிக்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணியில் விராட் கோலியை உட்கார வைத்து விட்டு ஷ்ரேயஸ் அய்யரைக் கொண்டு வருவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றி முதல் டி20யில் வெற்றி தொடக்கத்தை ஈடன் கார்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கண்ட இந்திய அணி இன்ரு இரண்டாவது டி20 போட்டியில்விளையாடும். . சில வழக்கமான தொடக்க வீரர்களைத் தவறவிட்டாலும், முதல் டி20ஐ ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இங்கிலாந்தை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்து, பின்னர் இந்தியா வந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு, வெள்ளிக்கிழமை ஆட்டம் செய்-அல்லது- செத்துமடி என்பதாக மாறுகிறது. கீரோன் பொல்லார்ட் மற்றும் கோ. தொடரை சமப்படுத்தவும், சுற்றுப்பயணத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்யவும் கூட்டு முயற்சி தேவைப்படும், இல்லையெனில், அவர்கள் வெறுங்கையுடன் நாடு திரும்பும் அபாயம் உள்ளது.
மறுபுறம், புதன்கிழமை ரவி பிஷ்னோயின் முதல் சர்வதேசப் போட்டியின் அபார பந்துவீச்சினால் இந்தியா மகிழ்ச்சியடையும். பிஷ்னோய் தனது கூக்ளிகளால், ஒரே ஓவரில் ரோஸ்டன் சேஸ் மற்றும் ரோவ்மேன் பவலை வெளியேற்றி, ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருதை பெற்று ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
அவர் நான்கு ஓவர்களில் 2/17 எடுத்தது முதல் T20I ஐ இந்தியா வெல்வதற்கு அடித்தளமாக அமைந்தது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக பிஷ்னோயின் செயல்பாடு இந்திய அணி நிர்வாகத்தை ஊக்குவிப்பதாக உள்ளது.
அவர் வீசுவது வெறும் கூக்ளிதான், ராங் ஒன் தான் என்பதை இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கண்டுப்பிடித்து விட்டால் சாத்து முறை நடக்கும் மாறாக அவர் கடந்த போட்டியிலிருந்து வேறுபட்டு லெக் ஸ்பின்னர்களாக வீசினால் இந்த 2வது டி20-யிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி அம்போதான்.
இந்தியா பேட்டிங் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை, விராட் கோலி விட்டேத்தியாக தொடர்ந்து ஆடி வருகிறார், அவரிடமிருந்து ஒத்துழைப்பு இல்லை, சும்மா ஆங்கில ஊடகங்கள், அவர் சொல்லித்தான் ரோகித் சர்மா இதைச் செய்தார், அதைச்செய்தார் என்பதெல்லாம் கிரிக்கெட்டைத் தாண்டிய கோலி விசுவாசமே தவிர வேறில்லை, ரோகித் சர்மா கேப்டன்சி தோனிக்குப் பிறகு அணித்தேர்வு களவியூகம் என்று மிகவும் கச்சிதமாக உள்ளது, இதில் கோலியின் பங்கை தூக்கிப்பிடிபப்து பொய்தானே தவிர வேறொன்றுமில்லை.
எனவே விராட் கோலிக்கு ஓய்வு அளித்து ஷ்ரேயஸ் அய்யரைக் கொண்டு வர வேண்டு, எத்தனை சர்வதேசப் போட்டிகளுக்குத்தான் அவரை உட்கார வைக்க முடியும்? தென் ஆப்பிரிக்காவில் சொதப்பச் சொதப்ப கோலி ஆடவில்லையா?
இந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி, ஒருநாள் அணியை விட நிச்சயம் பரவாயில்லை. போவெல், பூரன், பொலார்ட், ஓடியன் ஸ்மித், ரொமரியோ ஷெப்பர்ட் போன்றோருக்கு ஆட்டம்பிடித்து விட்டால் கண்ணுக்கு அதிரடி விருந்து கிடைக்கும். ஆனால் ஸ்பின் பலவீனம் உள்ளது.
புவனேஷ்வர் குமாரையெல்லாம் டோண்ட் பவுல் என்று அடித்து நொறுக்க வேண்டும், அதைச் செய்ய தவறுகின்றனர். இன்று வெஸ்ட் இண்டீஸ் அணுகுமுறையில் மாற்றம் இருக்கிறதா என்பதைப் பார்ப்போம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.