Home /News /sports /

IND vs SL T20: இலங்கை தொடர்: இந்திய அணியின் 2 முக்கியமான வீரர்கள் திடீர் நீக்கம்

IND vs SL T20: இலங்கை தொடர்: இந்திய அணியின் 2 முக்கியமான வீரர்கள் திடீர் நீக்கம்

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணியின் ஒயிட்-பால் ஸ்பெஷலிஸ்ட்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய அணியின் ஒயிட்-பால் ஸ்பெஷலிஸ்ட்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பந்துவீசும்போது சாஹருக்கு தொடை காயம் ஏற்பட்டதாலும், அதே நேரத்தில் சூர்யகுமாரின் கையில் சிறிய அளவு எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பிசிசிஐ அதிகாரி ஒருவர் சாஹரைப் பற்றிய செய்தியை பி.டி.ஐ-க்கு உறுதி செய்துள்ளார், மேலும் தீபக் சாஹர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்.சி.ஏ) தனது மறுவாழ்வு சிகிச்சையை முடித்துக் கொண்டுதான் திரும்புவார் என்று உறுதிப்படுத்தினார்."சாஹர் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார், மேலும் NCA இல் அவரது மறுவாழ்வு முடிவடையும்" என்று BCCI அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் போட்டிக்கு சாஹர் உடல் தகுதி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    "துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா ஏற்கனவே அணியில் இருப்பதால், அணிக்கு மாற்றாக யாரும் கோரவில்லை," என்று அதிகாரி மேலும் கூறினார்.

    பும்ராவைத் தவிர, புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், முகமது சிராஜ் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
    தகவல்களின்படி, லக்னோவில் தொடருக்கு முன்னதாக சூர்யகுமார் பயிற்சி அமர்வில் கலந்து கொண்டார், ஆனால் இப்போது அவர் தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டார். விண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது பீல்டிங்கின் போது சூரியகுமாருக்கு காயம் ஏற்பட்டதாக அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

    இதையும் படிங்க: 11 வயது இளம் கிரிக்கெட் வீரருக்கு உயிர் காக்கும் அறுவை சிகிச்சை- ரு.31 லட்சம் நன்கொடை அளித்த கே.எல்.ராகுல்

    பயோ-பபிள் நெறிமுறைகள் காரணமாக, இலங்கைக்கு எதிராகப் போட்டியிட இந்தியா ஏற்கனவே தங்கள் அணியில் போதுமான வீரர்களை கொண்டுள்ளதால் , இருவருக்குமான மாற்றீடுகளை பிசிசிஐ அறிவிக்காது.

    இலங்கைக்கு எதிரான சர்வதேச டி20 தொடர் லக்னோவில் வியாழக்கிழமை தொடங்குகிறது. அடுத்த இரண்டு டி20 போட்டிகள் தர்மசாலாவில் பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs srilanka

    அடுத்த செய்தி