• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Ind vs SL: இந்தியா 5 கேட்ச்கள் ட்ராப்; எக்ஸ்ட்ராஸ் 30 ரன்கள்- இளம் படையின் தவறுகள்

Ind vs SL: இந்தியா 5 கேட்ச்கள் ட்ராப்; எக்ஸ்ட்ராஸ் 30 ரன்கள்- இளம் படையின் தவறுகள்

இலங்கை அணி.

இலங்கை அணி.

கொழும்புவில் நடைபெற்ற இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்தியா தொடரை 2-1 என்று ஷிகர் தவான் தலைமையில் வென்றது.

  • Share this:
    முதலில் பேட் செய்த இந்திய அணி 101/1 என்ற நிலையிலிருந்து அடுத்த 27 ஓவர்களில் மடிந்து 43.5 ஓவர்களில் 225 ரன்களுக்குச் சுருண்டது. இலங்கை தரப்பில் அகிலா தனஞ்ஜயா மற்றும் பிரவீன் ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர், இந்திய அணியில் அதிகபட்சமாக பிரிதிவி ஷா 49 ரன்கள் எடுத்தார், இவர் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணி சரிவு கண்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 39 ஓவர்களில் 227/7 என்று வெற்றி பெற்றது. தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ 76 ரன்களையும் பனுகா ராஜபக்சா 65 ரன்களையும் எடுத்தனர்.

    32-வது ஓவர் முடிவில் 194/3 என்று இருந்த இலங்கை அணி சேத்தன் சக்காரியா, ராகுல் சாகர் ஓவர்களில் வரிசையாக ஆட்டமிழந்து 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசியில் ரமேஷ் மெண்டிஸ் 15 நாட் அவுட், அகிலா தனஞ்ஜயா 5 நாட் அவுட் வெற்றி பெறச் செய்தனர். இந்திய தரப்பில் சேத்தன் சக்காரியா 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் ராகுல் சாகர் 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக அவிஷ்கா பெர்னாண்டோ தேர்வு செய்யபப்ட்ட தொடர் நாயகனாக சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

    பிரிதிவி ஷா.


    இந்திய அணியின் பவுலிங் தாறுமாறாக அமைய 30 ரன்கள் எக்ஸ்ட்ராஸ் வகையில் வழங்கப்பட்டது, இதில் வைடு மட்டுமே 15. நோ-பால் 5.

    இந்திய அணி படுகேவலமாக பீல்டிக் செய்தது சுமார் 5 கேட்ச்கள் தரை தட்டின. அவிஷ்கா பெர்னாண்டோ, பனுகா ராஜபக்ச சேர்ந்து 109 ரன்களை விரைவில் சேர்த்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ராஜபக்ச 31 ரன்களில் இருந்த போது ஷிகர் தவான் கேட்சை விட்டார். இவருக்கே42 ரன்களில் சேத்தன் சகாரியா கேட்சை விட்டார். இவருக்கு மீண்டும் 61 ரன்களில் நிதிஷ் ராணா கேட்சை விட்டார். பெர்னாண்டோவுக்கு மணீஷ் பாண்டே ஒரு கேட்சை விட்டார். சாகர் பந்தில் தசுன் சனகா பாண்டேயிடம் கேட்ச் ஆகி வெளியேற 6 விக்கெட்டுகள் சரிந்தது அடுத்த பந்தே ரமேஷ் மெண்டீசுக்கு பிரிதிவி ஷா கேட்சை விட்டார்.

    முன்னதாக இந்திய அணியில் ஷிகர் தவான் 13 ரன்களில் சமீராவிடம் வீழ்ந்தார். பிறகு ஷா (49), சஞ்சு சாம்சன் (46) 13 ஓவர்களில் 74 ரன்களைச் சேர்த்தனர். ஷா 8 பவுண்டரிகளை விளாச 5 பவுண்டரி ஒரு நேர் சிக்ஸ் விளாசினார். ஆனால் 49 ரன்களில் கேப்டன் தசுன் ஷனகா பந்தில் ஷா எல்.பி.ஆகி வெளியேறினார். மணிஷ் பாண்டே இறங்கி பிளேடு போட்டு 11 ரன்களை எடுத்த போது உத்வேகம் குறைந்தது. சாம்சன் இன்சைடு அவுட் ஷாட்டை தூக்கி அடித்து கேட்ச் ஆனார். ஜெயவிக்ரமாவின் அபார இடது கை ஸ்பின் பிளைட் பந்தில் பாண்டே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார், இத்தோடு பாண்டேவின் இந்திய கிரிக்கெட் வாழ்வு முடிந்து விட்டது என்று கொள்ளலாம்.

    ஹர்திக் பாண்டியா (17) 3 பவுண்டரிகளை அடித்தார். இவரும் ஜெயவிக்ரமாவின் அற்புத பந்துக்கு வெளியேறினார். சூரியகுமார் யாதவ் எது நடந்தால் என்ன என்று அவர் தன் பாணியில் அற்புதமாக ஆடி 37 பந்துகளில் 40 ரன்களை 7 பவுண்டரிகளுடன் அடித்தார். தனஞ்ஜெயாவின் ஆஃப் பிரேக்கில் எல்.பி.ஆகி வெளியேறினார். அறிமுக வீரர்கள் கிருஷ்ணப்பா கவுதம், நிதிஷ் ராணா ஏமாற்றமளித்தனர். 154/3 என்று இருந்த இந்திய அணி 225 ரன்களுக்கு மடிந்தது.

    இரு அணிகளும் அடுத்து டி20 தொடரில் மோதுகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: