ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இலங்கையுடன் முதல் டி20 போட்டி.. தட்டித்தூக்குமா இந்தியா? பலம் பலவீனம் என்ன?

இலங்கையுடன் முதல் டி20 போட்டி.. தட்டித்தூக்குமா இந்தியா? பலம் பலவீனம் என்ன?

கிரிக்கெட்

கிரிக்கெட்

IND vs SL: 2023-ம் ஆண்டை வெற்றியுடன் தொடங்க இந்திய கிரிக்கெட் அணி தீவிரம் காட்டி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, தலா மூன்று டி-20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதில், முதலாவது டி-20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.ரோஹித், கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், டி-20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் இந்திய அணி களம் காண உள்ளது.

சொந்த மண்ணில் களமிறங்கும் இந்திய அணி, இஷன் கிஷன், ஷுப்மன் கில், சூர்யகுமார், சஞ்சு சாம்சன் என பேட்டிங்கில் வலுவான வீரர்களைக் கொண்டுள்ளது. பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்தர் சஹல், வாஷிங்டன் சுந்தர் பக்கபலமாக இருப்பர். டி-20 தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதுடன், இதுவரை இலங்கைக்கு எதிராக விளையாடிய 19 போட்டிகளில் 15-ல் வெற்றி வாகை சூடியுள்ளது. எனவே, தனது ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் உள்ளது.

அதேவேளையில், ஷனகா தலைமையிலான இலங்கை அணி, அண்மையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. எனவே, நடப்புத் தொடரிலும் இந்திய அணிக்கு சவால் அளிக்க தீவிரம் காட்டி வருகிறது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம்

First published:

Tags: T20