இந்தியா - இலங்கை போட்டியின் போது பறக்கவிடப்பட்ட 'Justice for Kashmir' பேனரால் பரபரப்பு!

ICC Wordl Cup 2019 | India vs Srilanka | உலகக் கோப்பை தொடரில் இதுப்போன்று நடப்பது முதல் முறை இல்லை. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டியின் போதும் இதுப்போன்ற பேனர் பறக்கவிடப்பட்டது குறிப்பிடதக்கது.

இந்தியா - இலங்கை போட்டியின் போது பறக்கவிடப்பட்ட 'Justice for Kashmir' பேனரால் பரபரப்பு!
பேனருடன் பறந்த சிறிய ரக விமானம்
  • News18
  • Last Updated: July 6, 2019, 8:28 PM IST
  • Share this:
இந்தியா - இலங்கை போட்டியின் போது 2 சிறுரக விமானங்கள் மூலமாக 'Justice for Kashmir', India stop genocide & free Kashmir' என்ற வாசங்கள் கொண்ட பேனரை பறக்கவிட வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - இலங்கை மோதும் 44-வது லீக் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மைதானத்தில் குறிப்பிட்ட பகுதிக்குள் 2 சிறுரக விமானங்கள் பறந்தன. அந்த சிறு ரக விமானத்தில் 'Justice for Kashmir', India stop genocide & free Kashmir' என்ற வாசகங்கள் கொண்ட பேனர்கள் பறக்கவிடப்பட்டிருந்தன.

பேனருடன் பறந்த சிறிய ரக விமானம்உலகக் கோப்பை தொடரில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது  முதல் முறை இல்லை. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டியின் போது 'Justice for Balochistan' என்ற வாசகம் இடம்பெற்றிருந்த பேனர் பறக்கவிடப்பட்டது. இதானல் இருநாட்டு ரசிகர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அந்தப் போட்டியும் இதே மைதானத்தில் தான் நடைபெற்றது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் மீண்டும் அரசியல் தொடர்பான வாசங்கள் அடங்கிய பேனர் பறக்கவிடப்பட்டதற்கு ஐசிசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஐசிசி செய்திதொடர்பாளர் தெரிவிக்கையில், “இதுபோன்ற சம்பவங்கள் எங்களை மிகவும் வேதனையடையச் செய்துள்ளது. கிரிக்கெட்டில் அரசியல் சார்ந்த செய்திகளைப் புகுத்துவதை ஐசிசி ஒரு போதும் ஏற்காது. உள்ளூர் போலீசாருடன் இணைந்து நாங்களும் அரசியல் சார்ந்த போராட்டங்களைத் தவிர்க்க போராடி வருகிறோம். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்வதாக உள்ளூர் போலீசார் உறுதி அளித்துள்னர்'' என தெரிவித்துள்ளார்.Also watch

First published: July 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading