முகப்பு /செய்தி /விளையாட்டு / Ind vs SL 2nd test: கபில்தேவின் 40 ஆண்டுகால சாதனையை உடைத்த ரிஷப் பண்ட்- டெஸ்ட் அதிவேக அரைசதம்

Ind vs SL 2nd test: கபில்தேவின் 40 ஆண்டுகால சாதனையை உடைத்த ரிஷப் பண்ட்- டெஸ்ட் அதிவேக அரைசதம்

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் சனிக்கிழமை தனது புகழ்பெற்ற அதேவேக சாதனை அரைசதத்தை எடுத்தார். இலங்கைக்கு எதிரான பிங்க் டெஸ்டின் நாளில் பேட்டிங் செய்த விக்கெட் கீப்பர்-பேட்டர் 28 பந்துகளில் அரை சதம் விளாசினார், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இந்திய வீரர் அடித்த அதிவேக அரைசதம் என்ற சாதனையை படைத்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் சனிக்கிழமை தனது புகழ்பெற்ற அதேவேக சாதனை அரைசதத்தை எடுத்தார். இலங்கைக்கு எதிரான பிங்க் டெஸ்டின் நாளில் பேட்டிங் செய்த விக்கெட் கீப்பர்-பேட்டர் 28 பந்துகளில் அரை சதம் விளாசினார், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இந்திய வீரர் அடித்த அதிவேக அரைசதம் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம் கபில்தேவ் 40 ஆண்டுகளாக வைத்திருந்த அதிவேக அரைசத சாதனையை முறியடித்தார். கபில் தேவ் 30 பந்துகளில் அரைசதம் கண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸின் 42வது ஓவரில் பிரவீன் ஜெயவிக்ரம வீசிய வேகப்பந்து வீச்சில் பந்த் இந்த மைல்கல்லை எட்டினார். இந்த சாதனையின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். புகழ்பெற்ற ஆல்-ரவுண்டர் 1982 இல் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் 30 பந்துகளில் அரை சதம் விளாசினார்.

ரிஷப் பண்ட் இன்று இறங்கியது முதல் உக்கிரமான மூடில் இருந்தார், முதலில் 2 சிக்ஸ்களை விளாசினார், பிறகு கட் ஷாட், இறங்கி வந்து பவுண்ட்ரி, ஸ்கூப் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப் என்று பவுண்டரிகளாக விளாசி ஒரு கட்டத்தில் 260% ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார் கடைசியில் 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 31 பந்துகளில் 50 ரன்களில் வெளியேறினார். ஆனால் 28 பந்துகளிலேயே அரைசதம் முடித்து கபில் தேவ் சாதனையை முறியடித்தார்.

பேட்டிங்கில் எண். 7-ல் இறங்கிய கபில் தேவ் 30 பந்துகளில் அரைசதம் அடித்து 53 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். ஆனால், அந்த டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியா 2 வது இன்னிங்சில் சற்று முன் வரை 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது,  விராட் கோலிக்கு 2வது இன்னிங்சிலும் பந்து உருண்டு எல்.பி.ஆனார். பரிதாபமே. மொத்தமாக இந்திய அணி இலங்கையைக் காட்டிலும் 342 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது, டிக்ளேர் செய்து விடலாம். அந்த அணி எப்படியும் 100 ரன்கள்தான் எடுப்பார்கள்.

முன்னதாக இந்திய துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா ஞாயிற்றுக்கிழமை சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இலங்கை பேட்டிங் வரிசையை வீழ்த்தினார். பும்ரா தனது 29வது டெஸ்ட் போட்டியில் எட்டாவது முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கையை 109 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியாவுக்கு முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலையை வழங்கினார்.

இந்த சாதனையின் மூலம், அக்சர் படேல் (2), இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரைத் தொடர்ந்து பகல்-இரவு டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது இந்திய பந்துவீச்சாளர் பும்ரா ஆவார். இந்திய துணை கேப்டன் 24க்கு 5 விக்கெட்டுகளை பதிவு செய்தார். இலங்கைக்கு எதிராக இந்திய வேகப்பந்து வீச்சாளரின் சிறந்த எண்ணிக்கை. அவர் 2015 இல் கொழும்பில் 5/54 என்ற இஷாந்தின் எண்ணிக்கையை முறியடித்தார்.

சொந்த மண்ணில் பும்ரா தனது முதல் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, கபில்தேவின் நம்பமுடியாத சாதனையை சமன் செய்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தனது 29வது டெஸ்ட் போட்டியில் 8வது 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது அதிசய தற்செயலாகும். ஒரேநாளில் பும்ரா கபில் சாதனையை சமன் செய்ய ரிஷப் பண்ட் அதிவேக அரைசதம் எடுத்து 28 பந்துகளில் கபில் தேவ் அரைசத சாதனையை உடைத்தார்.

First published:

Tags: India vs srilanka, Jasprit bumrah, Rishabh pant