இந்தியா - இலங்கை இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. டி 20 தொடரை இந்திய அணி 2-க்கு ஒன்று என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து, முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் சதத்தால் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பிற்பகல் ஒன்றரை மணிக்கு தொடங்குகிறது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளதால், இந்த போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக, கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிராக விளையாடிய போது, ரோகித் சர்மா 264 ரன்கள் குவித்தது சாதனை படைத்துள்ளதால், இன்றைய போட்டியிலும் அவர் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. விராட் கோலியும் ரோகித் ஷர்மாவும் கடந்த ஆட்டத்தை போல பேட்டிங்கில் தங்கள் பங்களிப்பை கொடுத்தால் இந்திய அணிக்கு பெரும் பலமாக இருக்கும்.
இந்த போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளதால், மோசமான ஃபார்ம்மில் உள்ள கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஆகிய ஒருவருக்குப் பதிலாக சூர்யகுமார் அல்லது இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BCCI, Ind vs SL, Indian cricket team, Rohit sharma, Virat Kohli