இந்தியா இலங்கை மேட்ச் இன்னைக்கு நடக்குமா?.. மழை குறுக்கிட வாய்ப்பு

இந்திய அணி

ஷிகர் தவான் முதன்முறையாக இந்திய அணியை வழிநடத்துகிறார்.

  • Share this:
    ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இன்று எதிர்கொள்ள உள்ளது.

    இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்தப்போட்டி இந்திய நேரப்படி 3 மணிக்கு தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கிறது. ஷிகர் தவான் தலைமையில் ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட 2-ம்தர இந்திய அணி இலங்கைக்கு பயணித்துள்ளது. ஷிகர் தவான் முதன்முறையாக இந்திய அணியை வழிநடத்துகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தியா - இலங்கை தொடர் முதலில் கடந்த 13-ந்தேதி தொடங்க இருந்தது. இலங்கை அணி ஊழியர்கள் 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்தப்படும் நாட்கள் அதிகரிப்பு காரணமாக 5 நாள் தாமதமாக இப்போது தொடங்குகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 159 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 91-ல் இந்தியாவும், 56-ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது. எஞ்சிய 11 ஆட்டங்களில் முடிவில்லை.இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொழும்புவில் இடியும் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    இலங்கை அணிக்கு எதிராக இந்தியா 3-0 என்ற கணக்கில் வெல்ல பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.  கொரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றாத காரணத்தால் டிக்வெல்லா, குணதிலகா, குசல்மெண்டிஸ் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. குசல் பெரரா காயம் காரணமாக விலகியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: