Home /News /sports /

கோலி எங்கே? திராவிட் பிறந்த தின கொண்டாட்டத்தில் விராட் கோலி இல்லை? - ரசிகர்கள் ஆச்சரியம்

கோலி எங்கே? திராவிட் பிறந்த தின கொண்டாட்டத்தில் விராட் கோலி இல்லை? - ரசிகர்கள் ஆச்சரியம்

திராவிட் பிறந்த தினம்

திராவிட் பிறந்த தினம்

மொகமட் ஷமி செவ்வாயன்று இந்திய கிரிக்கெட் அணியின் டிரஸ்ஸிங் ரூமில் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் பிறந்தநாளைக் கொண்டாடிய தொடர் படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் விராட் கோலியைக் காணவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    மொகமட் ஷமி செவ்வாயன்று இந்திய கிரிக்கெட் அணியின் டிரஸ்ஸிங் ரூமில் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் பிறந்தநாளைக் கொண்டாடிய தொடர் படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் விராட் கோலியைக் காணவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    கழுகுக் கண்கள் கொண்ட ரசிகர்கள் சிலர் ட்விட்டரில் ஒரு குறிப்பிட்ட விராட் கோலி இல்லாததை உடனடியாக சுட்டிக்காட்டினர். ஷமி, அஜிங்க்யா ரஹானே, சேதேஷ்வர் புஜாரா, ரிஷப் பந்த், விருத்திமான் சாஹா மற்றும் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோரை படங்களில் காணலாம். ஆனால், கோஹ்லி இல்லை.

    திராவிட் தனது 49வது பிறந்தநாளை செவ்வாயன்று கொண்டாடினார், பிறந்த நாள் அன்று எப்படி உணர்கிறீர்கல் என்று அவரிடம் கேட்ட போது “நீங்கள் வயதாகும்போது உங்கள் பிறந்தநாளில் என்ன உணர வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் ஒரு வயது மூத்தவர். ஆனால் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களிடமிருந்து சில நல்ல வாழ்த்துக்கள். அதற்கெல்லாம் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்றார்.



    கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முழுநேர தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரிக்குப் பிறகு திராவிட் தென்னாப்பிரிக்காவில் தனது முதல் வெளிநாட்டுப் பணியை மேற்கொண்டுள்ளார்.

    இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையே நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. செஞ்சூரியனில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றனர், ஆனால் தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க்கில் மீண்டும் களமிறங்கி சமன் செய்தது.

    கேப்டவுனில் செவ்வாய்கிழமை தொடங்கிய மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா தனது முதல் டெஸ்ட் தொடரை வெல்வதை இலக்காகக் கொண்டு ஆடி வருகிறது.

    இதையும் படிங்க: Happy Birthday Rahul Dravid- திராவிட் ‘சுவர்’ மட்டுமல்ல இன்னிங்ஸ் கட்டுமான ‘இன்ஜினியர்’

    டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் எடுத்த நிலையில், அவர்கள் முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்கா சார்பில் ககிசோ ரபாடா 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, இந்தியா தன் 2வது இன்னிங்ஸில் 57/2 என்று 70 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa, Rahul Dravid

    அடுத்த செய்தி