Home /News /sports /

எங்களிடமும் 150கிமீ வேகத்தில் வீசும் பவுலர்கள் உண்டு - தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா

எங்களிடமும் 150கிமீ வேகத்தில் வீசும் பவுலர்கள் உண்டு - தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா

தென் ஆப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா

தென் ஆப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா

உம்ரன் மாலிக் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பந்தைக் கூட வீசவில்லை அதற்குள் அவர் எதிரணியினரின் நரம்பு மண்டலங்களுக்குள் சென்று விட்டார், ஆம் டி20 தொடரை முன்னிட்டு தென் ஆப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா எங்களிடமும் மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் பவுலர்கள் இருக்கிறார்கள் என்று கூறுவதைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.

மேலும் படிக்கவும் ...

    உம்ரன் மாலிக் போன்ற வேகப்புயல்களை பவுமா ஒப்புக்கொள்வது மட்டுமல்லாமல், "எந்த பேட்டரும் 150 கிமீ வேகத்தில் பந்தை எதிர்கொள்ள விரும்புவதில்லை" என்றும் கூறுகிறார், மேலும் பல திறமையான வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய அணி தோண்டி எடுக்க ஐபிஎல் உதவியதற்காகவும் அவர் பாராட்டினார்.

    பவுமா கூறும்போது, “எங்களிடம் 150 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடிய பவுலர்கள் உள்ளனர். எனவே எங்கள் பவுலிங் ஆயுதக் கிடங்கில் அந்த 150கிமீ வேக ஆயுதமும் உள்ளது. ஆனால் உம்ரன் மாலிக் சிறப்பான திறமை வாய்ந்தவர், சர்வதேச கிரிக்கெட்டிலும் அவரது ஐபிஎல் திறமையைக் காட்டுவார் என்று நம்புகிறேன்.

    உம்ரான் மாலிக் இந்திய அணிக்கு ஒரு அற்புதமான வேகப்பந்து வீச்சாளர். இந்த வேகப்பந்து வீச்சு விருப்பங்கள் அனைத்தையும் ஐபிஎல் மூலம் கண்டுபிடிக்க முடிந்ததால், இந்திய அணிக்கு ஐபிஎல் ஒரு சிறப்பான தேர்வு முகாமாக உள்ளது.

    வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும் வசதி எங்களிடம் இல்லை. இந்தியா சில வீரர்களுக்கு ஓய்வளிக்கலாம் ஆனால் விளையாடும் தோழர்களும் நல்ல பார்மில் உள்ளனர் மற்றும் சிறந்த வீரர்களாக உள்ளனர். உலகக் கோப்பைக்கு தயாராகுவதுதான் முக்கியம்.

    வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும் வசதி எங்களிடம் இல்லை. இந்தியா சில வீரர்களுக்கு ஓய்வளிக்கலாம் ஆனால் விளையாடும் வீரர்களும் நல்ல பார்மில் உள்ளனர், சிறந்த வீரர்களாகவும் உள்ளனர், அதனால் ட்ராப் செய்ய முடியாது, ஏனெனில் உலகக் கோப்பைக்கு தயாராவதுதான் முக்கியம்.

    அணியில் வீரர்களுக்குள் போட்டி இருக்க வேண்டும், உலகக்கோப்பைக்குத் தேர்வாக வேண்டுமெனில் இந்தப் போட்டிகளில் சவாலாக ஆட வேண்டும் அவர்களுக்குத்தான் வாய்ப்பு, இது வீரர்களுக்கும் தெரியும். அதனால் இந்த டி20 தொடர் திறமைகளின் மோதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்” என்கிறார் பவுமா.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa

    அடுத்த செய்தி