தென்னாப்பிரிக்கா வீரரிடம் விதிமீறிய விராட் கோலி - ஐசிசி கண்டனம்

போட்டியின் போது வீரர் மற்றொரு வீரர் மற்றும் நடுவரை தேவையில்லாமல் உடல்ரீதியாக தொடக் கூடாது. இந்த விதியை விராட் மீறியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா வீரரிடம் விதிமீறிய விராட் கோலி - ஐசிசி கண்டனம்
INDvsSA
  • News18 Tamil
  • Last Updated: September 23, 2019, 10:25 PM IST
  • Share this:
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் கேப்டன் விராட் கோலி விதிமுறைகளை மீறி உள்ளதாக ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் சமன் செய்தது.

இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்த போது 5வது தென்னாப்பிரிக்கா பவுலர் ஹெண்டிரிக்ஸ் வீசினார். அந்த ஓவரில் ரன் எடுக்க முயன்ற போது விராட் கோலி ஹெண்டிரிக்ஸை இடித்து சென்றுள்ளார். இது விதியை மீறும் செயல் என்று ஐசிசி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.


இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள செய்தியில், “இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஐசிசி விதி 2.12-ஐ மீறியுள்ளார். இதன்படி போட்டியின் போது வீரர் மற்றொரு வீரர் மற்றும் நடுவரை தேவையில்லாமல் உடல்ரீதியாக தொடக் கூடாது. இந்த விதியை விராட் மீறியுள்ளார்.இதை அவர் ஒப்புக் கொண்டும் உள்ளார். எனவே அவருக்கு கண்டனம் தெரிவிப்பதோடு ஒரு ஒழுங்குமுறை மதிப்பிழப்பு புள்ளியையும் பெற்றுள்ளார்.

கேப்டன் விராட் கோலி இதற்கு முன் 2 ஒழுங்குமுறை மதிப்பிழப்பு புள்ளிகளை பெற்றுள்ளார். 2018ம் நடந்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டியின் போதும் 2019 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது தலா ஒரு ழுங்குமுறை மதிப்பிழப்பு புள்ளியை பெற்றார்.

Also Watch
First published: September 23, 2019, 10:25 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading