INDvsSA | தர்மசாலா ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் போடுவதில் தாமதம்..!

INDvsSA | தர்மசாலா ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் போடுவதில் தாமதம்..!
தர்மசாலா ஆடுகளம்
  • Share this:
தர்மசாலாவில் ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் போடுவது தாமதமாகி உள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. தர்மசாலாவில் நடைபெறும் முதல் ஒரு நாள் போட்டி ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் போடுவதில் தாமதமாகி உள்ளது.

நியூசிலாந்து அணிக்கு தெடாரில் இந்திய அணி தொடர் தோல்விக்கு பின் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளதால் இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இன்றையப் போட்டியிலும் கே.எல்.ராகுல் கீப்பிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




தவான், ஹர்திக், புவனேஸ்வர் குமார் அணிக்கு திரும்பி உள்ளது மிகப்பெரிய பலமாக இருக்கும். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இன்றையப் போட்டியில் வீரர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்