Home /News /sports /

இந்திய அணியின் கேப்டனாகிறார் ஷிகர் தவான், லஷ்மண் பயிற்சியாளர்...

இந்திய அணியின் கேப்டனாகிறார் ஷிகர் தவான், லஷ்மண் பயிற்சியாளர்...

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளார், அதே போல் விவிஎஸ் லஷ்மண் அணியின் பயிற்சியாளராக இருப்பார் என்று பிசிசிஐ தரப்பு ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளார். அதே போல் விவிஎஸ் லஷ்மண் அணியின் பயிற்சியாளராக இருப்பார் என்று பிசிசிஐ தரப்பு ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

    டி20 உலகக்கோப்பைக்குச் செல்லும் இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்போவதால் புதிய அணியை தவான் தலைமையில் களமிறக்கப்போகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் உள்ளது.

    ஐசிசி டி20 உலகக்கோப்பையின் 8வது தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. ராகுல் திராவிட் இந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக செல்லவிருப்பதால் அவருக்கும் ஓய்வு அளித்து தென் ஆப்பிரிக்கா தொடரில் லஷ்மணை தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கவுள்ளார்கள்.

    செப்டம்பர் 28ம் தேதி தொடங்கி இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மோதுகிறது.
    முதல் டி20 செப்டம்பர் 28ம் தேதி திருவனந்தபுரத்திலும் 2வது டி20 மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி குவாஹாத்தியிலும், அக்டோபர் 4ம் தேதி இந்தூரில் 3வது டி20 போட்டி நடக்கிறது.

    இதையும் படிங்க: சென்னை ஓபன் டென்னிஸ்: சர்வீஸில் தெறிக்கவிட்ட இந்திய வீராங்கனை கர்மான் கவுர்.. அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

    அக்டோபர் 6ம் தேதி லக்னோவில் முதல் ஒருநாள் போட்டியும், அக்.9, ராஞ்சி, 11, டெல்லியில் அடுத்த 2 ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன, இதில் ஒருநாள் தொடருக்கு மட்டும் ஷிகர் தவான் கேப்டன்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Cricket, Shikhar dhawan, Team India

    அடுத்த செய்தி