Home /News /sports /

இந்தியாவுக்கு எதிரான தென் ஆப்பிரிக்க டி20 அணியில் பழைய பவுலர், மும்பை இந்தியன்ஸ் வீரர்

இந்தியாவுக்கு எதிரான தென் ஆப்பிரிக்க டி20 அணியில் பழைய பவுலர், மும்பை இந்தியன்ஸ் வீரர்

தென் ஆப்பிரிக்கா டி20 அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்கா டி20 அணி அறிவிப்பு

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஐபிஎல் முடிந்தவுடன் நடைபெறவிருக்கும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பழைய இடது கை வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பார்னெல் சேர்க்கப்பட்டுள்ளார், இவருக்கு 33 வயதுதான் ஆகிறது என்றாலும் 2009லேயே ஒருநாள், டி20 போட்டிகளிலும் 2010-ல் டெஸ்ட் அணியிலும் தேர்வு செய்யப்பட்டாலும் வெய்ன் பார்னெல் பாவம் இதுவரை 6 டெஸ்ட், 67 ஒருநாள் சர்வதேச போட்டிகள், வெறும் 40 டி20 போட்டிகளிலேயே தென் ஆப்பிரிக்காவுக்காக ஆடியுள்ளார். இப்போது சமீபத்தில் மீண்டும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதே போல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடும் இளம் வீரர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் யுஏஇயில் நடந்த உலகக்கோப்பை டி20 போட்டித் தொடருக்குப்பிறகு தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஆட முடியாமல் போன ஆன்ரிச் நார்ட்யே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி வருமாறு:

டெம்பா பவுமா, குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி ஆன்ரிச் நார்ட்யே, ககிசோ ரபாடா, வெய்ன் பார்னெல், தப்ரைஸ் ஷம்சி, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், ரசி வான் டெர் டஸன், மார்க்கோ யான்சென்.
Published by:Muthukumar
First published:

Tags: India vs South Africa, T20

அடுத்த செய்தி