கேப்டவுனில் நடைபெறும் 3வது, கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 223 ரன்களையாவது எடுக்க விராட் கோலியின் ஆக மெதுவான 79 ரன்களே உதவியது என்றால் மிகையாகாது. கோலி 157 பந்துகளை எடுத்துக் கொண்டு அரைசதம் கண்டார்.
இந்த அரைசதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் 2வது ஆக மெதுவான அரைசதமாகும். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராகுல் திராவிடின் 624 ரன்களைக் கடந்தார் விராட் கோலி.
ரபாடாவிடம் தொடர்ந்து பீட் ஆனாலும் விக்கெட்டை கொடுக்காமல் இருந்தார் விராட் கோலி. கோலியின் உத்தியில் திராவிட் வந்த பிறகு பெருமாற்றம் நிகழ்ந்துள்ளது, ரவிசாஸ்திரிக்கு இதெல்லாம் தெரியாது, அவர் கோலியைத் தட்டி விட்டு தன் ஈகோவை சொறிந்து விட்டுக்கொண்டே காலத்தை ஓட்டி விட்டார், வெற்றி கோச் என்ற பெயரையும் எடுத்து விட்டார், ஆனால் எந்த ஒரு பேட்டரின் பிரச்சனையையும் அவரால் தீர்க்க முடியவில்லை.
ராகுல் திராவிட் விராட் கோலியின் டெக்னிக்கை மாற்றியுள்ளார், கொஞ்சம் இரட்டைக் கண்ணால் பார்க்கும் ஸ்டான்ஸுக்கு கோலியை மாற்றிய ராகுல் திராவிட், முன் காலை குறுக்காக நீட்டாமல், முன் காலை நேராக நீட்டி ஆடியதினால் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அவரை கவர்ச்சி காட்டி இழுக்கும் பவுலிங் கோலியை ஒன்றும் செய்ய முடியவில்லை, சுலபமாக அந்தப் பந்துகளை ஆடாமல் விட்டார். கொஞ்சம் மொகீந்தர் அமர்நாத் போல் டபுள் ஐ ஸ்டான்ஸ் மற்றும் பந்தை ஆடாமல் விடும் தன்மையை கோலியிடம் பார்க்க முடிந்த்து.
முதலில் செடேஸ்வர் புஜாரா (43) உடன் இணைந்து 3வது விக்கெட்டுக்காக 62 ரன்களைச் சேர்த்த விராட் கோலி, பிறகு ரிஷப் பண்ட்டுடன் இணைந்து 51 ரன்கள் கூட்டணி அமைத்தார்.
Also Read: கேகிசோ ரபாடான்னா சும்மாவா?- தென் ஆப்பிரிக்கா நாளாக மாற்றினார்-இந்தியா 223 ஆல் அவுட்
கடைசியில் ஸ்டாண்ட் கொடுக்க ஆளில்லாமல் எல்லாம் வெளியேற தான் கஷ்டப்பட்டு வளர்த்துக் கொண்ட புதிய டெக்னிக்கை மறந்து காலை குறுக்காக நீட்டி பழையபடிக்கு பந்தை தொட முயன்று ஆடினார், அதிலும் எதுவும் சிக்கவில்லை, மட்டை எட்ஜ்தான் சிக்கியது, ரபாடாவிடம் கடைசியாக வீழ்ந்தார் விராட் கோலி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.