Home /News /sports /

என்ன திறமை, என்ன டெக்னிக்.. ஏ.பி.டிவில்லியர்ஸ் புகழும் வீரர் இவரா?

என்ன திறமை, என்ன டெக்னிக்.. ஏ.பி.டிவில்லியர்ஸ் புகழும் வீரர் இவரா?

ஏ.பி.டிவில்லியர்ஸ்

ஏ.பி.டிவில்லியர்ஸ்

“டெஸ்ட் போன்ற நீண்ட வடிவத்திலும் ஒருநாள், டி20 போன்ற குறுகிய வடிவத்திலும் கீகன் பீட்டர்சன் விளையாட முடியும்! உலகின் சிறந்த பந்து வீச்சுக்கு எதிராக நான் பீட்டர்சனிடம் கண்ட அமைதி, திறமை மற்றும் நுட்பத்தால் மிகவும் உற்சாகமடைந்துள்ளேன்”

மேலும் படிக்கவும் ...
    தென் ஆப்பிரிக்க கிரிகெட் அணியின் வருங்கால பேட்டிங் நட்சத்திரமான கீகன் பீட்டர்சனை 360 டிகிரி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் இந்திய வேகத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தியதற்காக வெகுவாகப் பாராட்டினார்.

    கேப்டவுனில் உள்ள நியூலேண்டில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் துணிச்சலாக ஆடி 72 ரன்களில் ஆட்டமிழந்த கீகன் பீட்டர்சன் மீது பேட்டிங் கிரேட் ஏபி டிவில்லியர்ஸ் பாராட்டு மழை பொழிந்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களை ஜஸ்பிரித் பும்ரா வெளியேற்றிய பிறகு, பீட்டர்சன் தென்னாப்பிரிக்காவின் மீண்டு எழ உதவினார். இதனால் தென் ஆப்பிரிக்கா 213 ரன்கள் எடுத்தது.

    தன் ட்விட்டர் பக்கத்தில் ஏபி. டிவில்லியர்ஸ், “டெஸ்ட் போன்ற நீண்ட வடிவத்திலும் ஒருநாள், டி20 போன்ற குறுகிய வடிவத்திலும் கீகன் பீட்டர்சன் விளையாட முடியும்! உலகின் சிறந்த பந்து வீச்சுக்கு எதிராக நான் பீட்டர்சனிடம் கண்ட அமைதி, திறமை மற்றும் நுட்பத்தால் மிகவும் உற்சாகமடைந்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

    கீகன் பீட்டர்சன்


    பீட்டர்சனின் இன்னிங்ஸ் இறுதியில் தேநீருக்குப் பிறகு முடிந்தது, பும்ரா தனது 4வது விக்கெட்டை எடுத்தார், இது டெஸ்ட் கிரிக்கெட்டில் பீட்டர்சனின் அதிகபட்ச ஸ்கோர். அதைத் தொடர்ந்து, வேகப்பந்து வீச்சாளர்கள் எளிதாக பின்வரிசை வீரர்களை சுருட்டினர். . கடந்த ஆண்டு டெஸ்ட் அறிமுகமான பீட்டர்சன், நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார், ஆனால் அவரது செயல்திறன் பற்றி கிரிக்கெட் உலகம் அதற்குள் பேசத்தொடங்கியுள்ளது. 28 வயதான அவர் ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸில் 62 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்காவின் 7 விக்கெட் வித்தியாச வெற்றிய்வைத் தீர்மானித்தது.

    பயிற்சியாளர் மார்க் பவுச்சர் வகுத்த பேட்டிங் திட்டத்தின்படி தென் ஆப்பிரிக்கா ரன்களில் பின்தங்குவது பற்றி அணி கவலையடைந்துள்ளதாக தெரிவித்தார். முதல் இன்னிங்ஸில் 43 மற்றும் 79 ரன்கள் எடுத்த சேட்டேஷ்வர் புஜாரா மற்றும் விராட் கோலி அணிக்கு சற்று தலைவலியாக இருந்ததாகவும், தென்னாப்பிரிக்க பவுலர்கள் அவர்களை ஆரம்பத்திலேயே வெளியேற்றினால் அது புத்திசாலித்தனமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
    Published by:Muthukumar
    First published:

    அடுத்த செய்தி