Home /News /sports /

IND vs SA 2nd Test| 100 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் சிறந்த பவுலர்: ஷர்துல் தாகூர் சாதனை

IND vs SA 2nd Test| 100 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் சிறந்த பவுலர்: ஷர்துல் தாகூர் சாதனை

சாதனை நாயகன் ஷர்துல் தாகூர்

சாதனை நாயகன் ஷர்துல் தாகூர்

தென் ஆப்பிரிக்காவுக்கு சென்ற இந்திய அணிகளில் அதிக விக்கெட்டுகளை ஒரு இன்னிங்சில் கைப்பற்றிய வகையில் இந்திய ஸ்விங் பவுலர் ஷர்துல் தாகூர் சாதனை புரிந்துள்ளார். நேற்று தென் ஆப்பிரிக்கா 229 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல் அவுட் ஆன போது ஷர்துல் தாகூர் 61 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை புரிந்தார்.

மேலும் படிக்கவும் ...
    தென் ஆப்பிரிக்காவுக்கு சென்ற இந்திய அணிகளில் அதிக விக்கெட்டுகளை ஒரு இன்னிங்சில் கைப்பற்றிய வகையில் இந்திய ஸ்விங் பவுலர் ஷர்துல் தாகூர் சாதனை புரிந்துள்ளார். நேற்று தென் ஆப்பிரிக்கா 229 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல் அவுட் ஆன போது ஷர்துல் தாகூர் 61 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை புரிந்தார்.

    கடந்த 100 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் ஒரு இன்னிங்சில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பவுலர்களில் இங்கிலாந்தின் அண்ட்ரூ கேடிக் (7/46, டர்பன், 1999), மேத்யூ ஹோகார்ட் (2005, 7/61) ஆகியோர் வரிசையில் சேர்ந்தார் ஷர்துல் தாக்கூர்.

    லார்ட் ஷர்துல் என்று செல்லமாக அழைக்கப்படும் ஷர்துல் தாகூர் மிக அருமையாக வீசினார், ஷமி, பும்ராவை மிகவும் எச்சரிக்கையுடன் ஆடிய தென் ஆப்பிரிக்கா ஷர்துல் வந்தவுடன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது ஆனால் நான் என்ன ரிலாக்ஸ் செய்ய சொத்தை பவுலரா என்று இவரது பந்து வீச்சு கேள்வி எழுப்பியது, அபாரமான இன்ஸ்விங்கர், ஆஃப் ஸ்டம்ப் லைன் என்று பின்னி எடுத்தார் ஷர்துல்.

    ஜவகல் ஸ்ரீநாத் இந்திய மட்டைப் பிட்சான அகமதாபாதில் தென் ஆப்பிரிக்காவை தன் 6/21 மூலம் சுருட்டியதை ஷர்துல் நேற்று தன் 7 விக்கெட்டுகளால் முறியடித்தார். அதே போல் போர்ட் எலிசபத் டெஸ்ட்டில் ஸ்ரீநாத் 2001-ல் 6/76 எடுத்ததையும் ஷர்துல் முறியடித்தார். தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் விக்கெட்டை முதலில் உடைத்தார் ஷர்துல்.

    இதையும் படிங்க: BAN vs NZ 1st test| உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி

    கீகன் பீட்டர்சன் மிக அருமையான அரைசதத்துக்குப் பிறகு ஷர்துலின் 2வது விக்கெட் ஆனார். ரசி வான் டெர் டியூசன் ரிஷப் பண்ட் தரையில் பட்டு பிடித்த கேட்சுக்கு துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆனார், ஆனால் இது ஷர்துல் தாகூரின் 3வது விக்கெட்.

    விக்கெட் கீப்பர் கைல் வெரைன் தெம்பா பவுமா 60 ரன்கள் கூட்டணி அமைத்தனர், ஆனால் கைல் வெரைன் ஷர்துலிடம் எல்.பி.ஆகி வெளியேறினார். தெம்பா பவுமா பிரமாதமாக ஆடி 6 பவுண்டரி மற்றும் அஸ்வினை மிகப்பெரிய மிட்விக்கெட் சிக்ஸுடன் 51 ரன்கள் எடுத்து ஷர்துலின் 5வது விக்கெட் ஆனார். ஆனால் தெம்பா பவுமாவின் ஸ்ட்ரெய்ட் ட்ரைவ், ஆன் டிரைவ் கண்களில் ஒத்திக் கொள்ளும்படியான ஷாட்கள் என்பதை மறுக்க முடியாது.

    உயர மார்க்கோ யான்சென், லுங்கி இங்கிடியையும் வீழ்த்தி ஷர்துல் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வாண்டரர்ஸில் 5 விக்கெட்டுகள் அல்லது அதற்கும் மேல் கைப்பற்றிய 6வது இந்திய பவுலர் ஷர்துல் தாக்கூர்.

    2ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 85/2 என்று இருந்தது, வாழ்வா சாவா இன்னிங்சில் புஜாரா 42 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 35 நாட் அவுட், ரகானே 22 பந்து 11 ரன் நாட் அவுட் என்று களத்தில் உள்ளனர். இந்திய அணி 58 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa, Shardul thakur

    அடுத்த செய்தி