Home /News /sports /

ஷர்துல் தாக்கூர் 3 விக். - தரையில் பட்டு பண்ட் எடுத்த கேட்சுக்கு அவுட்- தெ.ஆ. 102/4

ஷர்துல் தாக்கூர் 3 விக். - தரையில் பட்டு பண்ட் எடுத்த கேட்சுக்கு அவுட்- தெ.ஆ. 102/4

ஷர்துல் தாக்கூர் அபாரம் 3 விக்கெட்

ஷர்துல் தாக்கூர் அபாரம் 3 விக்கெட்

ஜொகான்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது, இந்த முறை ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை 8 ரன்களுக்குக் கைப்பற்றி அசத்தினார்.

மேலும் படிக்கவும் ...
    ஜொகான்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது, இந்த முறை ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை 8 ரன்களுக்குக் கைப்பற்றி அசத்தினார்.

    தரையில் பட்டு கேட்ச் எடுத்த ரிஷப் பண்ட்- வான் டெர் டியூசன் பரிதாப அவுட்:

    இந்த 3 விக்கெட்டுகளில் வான் டெர் டியூசன் அவுட் ஆனது மிகவும் பரிதாபத்துக்குரியது ஏற்கெனவே ஒருமுறை நடுவரால் அவுட் கொடுக்கப்பட்ட போது பந்து டியூசன் பேடில் பட்டு பண்ட்டிடம் சென்றது அதையும் தரையில் பட்டுத்தான் பிடித்தார் ரிஷப் பண்ட், ஆனால் அப்பீல் செய்தார். நிச்சயம் கேட்ச் பிடிப்பவருக்கு தரையில் பட்டது தெரியவே தெரியும், எனவே அங்கு ரிஷப் பண்ட் கிரிக்கெட் உணர்வுடன் ஆடவில்லை.

    இது ஒரு புறமிருக்க உணவு இடவேளைக்குக் கடைசி ஓவருக்கு முன்பாக இதே வான் டெர் டியூசன், ஷர்துல் தாக்கூரின் பயங்கரமான இன்ஸ்விங்கரை ஆடப்போக அது மட்டையின் உள்விளிம்பில் பட்டு பேடில் பட்டு ரிஷப் பண்ட்டிடம் சென்றது, அவரும் பிடித்தார், நடுவரும் அவுட் கொடுத்து விட்டார். ஆனால் ரிஷப் பண்ட் பிடித்த கேட்ச் தரையில் பட்டு எடுக்கப்பட்டது, வான் டெர் டியூசன் பாவம் 1 ரன்னில் வெளியேறினார், அது கேட்சே அல்ல, தரையில் பட்டு சென்றதற்கு நடுவர் அவுட் கொடுத்தார், இதை நடுவர் ரெஃபர் செய்திருக்க வேண்டும், அந்த நடுவர் பிரமாதமாக நேற்று நடுவர் பணி ஆற்றினார், இன்று தவறுகள் செய்தார். பாவம் வான் டெர் டியூசன் தரையில் பட்டு ரிஷப் பண்ட் எடுத்த கேட்சுக்கு ஆட்டமிழந்து செல்ல அத்துடன் உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது.

    முன்னதாக முதல் ஒரு மணி நேரத்தில் பும்ரா, ஷமி ஆகியோரின் டெஸ்ட்டிங் பவுலிங்கை ஒருவழியாக எல்கரும், கீகன் பீட்டர்சனும் கையாண்டு ஸ்கோரை 35/1லிருந்து 88 வரை கொண்டு சென்றனர், இந்தப் பகுதியில் ரன்கள் அதிகம் எடுத்தது கீகன் பீட்டர்சன் தான், எல்கர் சுவாராய் நின்றார். கடைசியில் 120 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்த போது ஷர்துல் தாக்கூர் அருமையாக ஒரு பந்தை அவரின் உடலுக்குக் குறுக்கே செலுத்த மட்டையின் விளிம்பில் லேசாகப் பட்டு பண்ட்டிடம் கேட்ச் ஆனது.

    கீகன் பீட்டர்சன் ஷமியின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி அரைசதம் கடந்தார், மிகப்பிரமாதமாக ஆடினார், இவரது உத்தி கல்லுக்கு சமமானது. 9 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்திருந்த இவர் இந்திய பேட்டர்கள் புஜாரா, ரகானே அவுட் ஆவதை முதல் டெஸ்ட்டிலிருந்து பார்த்த கோளாறோ என்னவோ விட்டு விட வேண்டிய பந்தை தொட்டார், கெட்டார், எட்ஜ் ஆகி மயன்க் அகர்வால் கையில் போய் உட்கார்ந்தது.

    அதன் பிறகுதான் வான் டெர் டியூசனுக்கு இருமுறை தரையில் பட்டு கேட்ச் ஆனது, ஒருமுறை நாட் அவுட், மறுமுறை தரையில் பட்டு எடுத்த கேட்சுக்கு அவுட். ஷர்துல் தாக்கூர் 4.5 ஓவர் 2 மெய்டன் 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். தெம்பா பவுமா ஒருமுனையில் ரன் எடுக்காமல் நிற்கிறார். விக்கெட் கீப்பர் கைல் வெரைன் இறங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa, Shardul thakur

    அடுத்த செய்தி