ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியா - தெ.ஆப்ரிக்கா முதலாவது ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்- பட்டிதார், ராகுல் திரிபாதி களம் இறங்க வாய்ப்பு

இந்தியா - தெ.ஆப்ரிக்கா முதலாவது ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்- பட்டிதார், ராகுல் திரிபாதி களம் இறங்க வாய்ப்பு

இந்திய அணி

இந்திய அணி

டி20 உலகக் கோப்பையில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் யாரும் இப்போட்டியில் விளையாடவில்லை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் இன்று நடைபெறுகிறது.

  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  தென் ஆப்ரிக்கா அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று லக்னோவில் நடைபெறுகிறது. பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் இப்போட்டிக்கு இந்திய அணியை ஷிகர் தவாண் வழிநடத்துகிறார்.

  டி20 உலகக் கோப்பையில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் யாரும் இப்போட்டியில் விளையாடவில்லை. இதனால் பட்டிதார், ராகுல் திரிபாதி ஆகியோர் தங்களது சர்வதேச பயணத்தை இன்று தொடங்குவார்கள் என தெரிகிறது.

  தென் ஆப்ரிக்கா அணியை பொறுத்தவரையில், 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கு இந்த தொடரை பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாள் போட்டி தரவரிசையில் தென் ஆப்ரிக்கா அணி தற்போது 11-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Cricket, Shikhar dhawan, Team India