• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ‘200 ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் ரசிகர்களின் வெற்றிக் குரல்கள் மைதானத்தில் எதிரொலிக்கும்’

‘200 ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் ரசிகர்களின் வெற்றிக் குரல்கள் மைதானத்தில் எதிரொலிக்கும்’

பாக். ரசிகர் மகிழ்ச்சியின் உச்சத்தில்

பாக். ரசிகர் மகிழ்ச்சியின் உச்சத்தில்

  • Share this:
    டி20 உலகக்கோப்பை, 2021 தொடரில் இந்திய அணியை நோ-லாஸில் வீழ்த்தியதை இன்னமும் பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் அந்நாட்டு பிரபல ரசிகரும் மாரோ முஜே மாரோ புகழ் பிரபலமுமான ரசிகர் மொமின் சாகிப் அடுத்த 200 ஆண்டுகளுக்கு இந்த வெற்றிக்குரல்கள் மைதானத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று கூறியுள்ளார்.

    இந்தியாதான் போட்டியில் வெல்லும் என்பது எழுதப்படாத விதி, மாற்ற முடியாத நிகழ்வு என்ற ரீதியில் ஓவர் பிட்ல் அப் கொடுக்கப்போய் கடைசியில் கிரிக்கெட் ஆட்டம் வெளியில் ஆடப்படுவதல்ல மைதானத்தில் விளையாட்டு வீரர்களால் ஆடப்படுவது, மேலும் கிரிக்கெட்டை நாம் ஆடுவதில்லை கிரிக்கெட்தான் நம்மை ஆட்டுவிக்கிறது என்பதையும் இந்த இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பைப் போட்டி அறிவுறுத்தியது.

    ஷாகின் அப்ரீடி இந்தியாவின் பிரசித்திப் பெற்ற டாப் ஆர்டரைக் கழற்ற இந்தியாவினால் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து ட்விட்டர், உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பல்தரப்பட்ட உணர்ச்சிகள் ததும்பி வழிகின்றன. பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் ரசிகர் மோமின் சாகிப், இவர் மாரோ முஜே மாரோ என்று அறியப்படுபவர், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

    “பாகிஸ்தான் 10 விக்கெட்டுகளில் வென்றுள்ளது. நான் சேற்றைத் தின்பது போல் உணர்கிறேன். இது வரலாற்று வெற்றி, இந்த துபாய் மைதானத்தில் இந்த வெற்றியின் ரசிகர்கள் குரல்கள் 200 ஆண்டுகளுக்கு ஒலித்துக் கொண்டே இருக்கும்” என்று இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Momin Saqib (@mominsaqib)






    பாபர் ஆசம் இதுதான் ஆரம்பம் என்று கூற விராட் கோலியும் இது ஆரம்பம்தான் முடிவு அல்ல, என்று இந்திய அணி மீண்டு எழும் என்று கூறியுள்ளார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: