• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கோலியெல்லாம் பயமில்ல, ரோகித் சர்மா, பும்ரான்னா பயம்: யூனிஸ் கான்

கோலியெல்லாம் பயமில்ல, ரோகித் சர்மா, பும்ரான்னா பயம்: யூனிஸ் கான்

யூனிஸ் கான்

யூனிஸ் கான்

  • Share this:
    இந்திய அணியில் அச்சமூட்டக்கூடிய வீரர் யார் என்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக தெரிவித்துள்ளார். ஐசிசி டி20 உலகக்கோப்பை, 2009-ல் பாகிஸ்தான் சாம்பியன் ஆனது யூனிஸ் கான் தலைமையில்தான். இந்நிலையில் கோலியை இன்னும் பாகிஸ்தான் அவுட் செய்யவே இல்லை, ஆனால் அவர் பயம் அல்ல ரோகித் சர்மா, பும்ராதான் பயம் என்று கூறியுள்ளார்.

    ஆசிய ஜெயண்ட்களான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பை போட்டியில் மோதுகின்றன. இதுவரை 12 முறை உலகக்கோப்பைகளில் மோதி ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் வென்றதில்லை, ஆனால் இந்த முறை செம பார்மில் இருக்கும் பாபர் அசாம் தலைமையில் நல்ல அணி பாகிஸ்தான் தரப்பில் களமிறங்குகிறது. இந்திய அணி இந்த உலகக்கோப்பையை வெல்லும் சாம்பியன் அணியாக உள்ளது, வார்ம் அப் போட்டிகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை ஊதித்தள்ளியது.

    இடையில் கோலியை விட பாபர் அசாம் சிலபல நல்ல இன்னிங்ஸ்களை அனைத்து வடிவங்களிலும் ஆடியுள்ளார், விராட் கோலியிடம் சில ஸ்ட்ரோக்குகள் கிடையாது, பாபர் அசாமிடம் அனைத்து ஸ்ட்ரோக்குகளும் உள்ளன. விராட் கோலி சமீபமாக வேகப்பந்து ஸ்பின் என்று ஆட்டமிழந்து வருகிறார். இதனால் பாபர் அசாம், விராட் கோலி ஒப்பீட்டில் நடப்பு பார்மின் படி பாபர் அசாம் கை ஓங்கியுள்ளது.

    இந்நிலையில் யூனிஸ் கான் கூறியதாவது:

    இந்தியா-பாகிஸ்தான் அணியில் விராட் கோலி, பாபர் அசாம் நம்பகமான பேட்ஸ்மென்கள், ஆனால் ரோகித் சர்மா, பாகிஸ்தான் தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான் அபாயகரமான வீரர்கள். ஆனால் வெளிச்சம் இரு அணிகளின் கேப்டன் மேல்தான் அதிகம் உள்ளது. அதனால் ரிஸ்வான், ரோகித் சர்மா மீதான சுமை குறைகிறது. இதனால் மேட்ச் வின்னிங் ஆட்டத்தை இவர்கள் ஆட முடியும்.

    பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல நிலையில் உள்ளனர், ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சு நன்றாக முன்னேற்றம் கண்டு வருகிறது. பும்ரா அபாயகரமான பவுலர், கடந்த சில மாதங்களாக அவர் பிரில்லியண்டாக வீசி வருகிறார். எனவே ரோகித் சர்மா, பும்ரா அபாயகரமான வீரர்கள்.

    இவ்வாறு கூறினார் யூனிஸ் கான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: