• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • லெஜண்ட் லெஜண்ட் தான் - தோல்வியடைந்தாலும் பாகிஸ்தான் வீரர்களுடன் தோனி உரையாடல்

லெஜண்ட் லெஜண்ட் தான் - தோல்வியடைந்தாலும் பாகிஸ்தான் வீரர்களுடன் தோனி உரையாடல்

தோனி உரையாடும் காட்சி.

தோனி உரையாடும் காட்சி.

  • Share this:
    துபாயில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் வீரர்களுடன் இந்தியாவின் லெஜண்ட் ‘தல’ தோனி மனம்விட்டுப் பேசினார்.

    இமாத் வாசிம், ஷோயப் மாலிக், பாபர் அசாம், ஆகியோர் தோனியிடம் சிறிது நேரம் உரையாடினர். இந்திய அணி வீரர்கள் தோனி மெண்ட்டாராக நியமிக்கப்பட்டதையடுத்தும் ஓய்வறையில் தோனி இருப்பதையும் வெகுவாக உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். ஆனால் நேற்று பாகிஸ்தான் அணி வீரர்களும் தோனியின் இருப்பை பயன்படுத்திக் கொண்டு, அரிய வாய்ப்பு ஒன்றை தங்கள்வசமாக்கி தோனியுடன் உரையாடியதைப் பார்க்க முடிந்தது.

    கிரிக்கெட்டை கிரிக்கெட்டாகப் பார்க்கும் ரசிகர்களுக்கு கோலி போய் ரிஸ்வானையும் பாபர் அசாமையும் கட்டிப்பிடித்து வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ச்சிகளைப் பரிமாறிக்கொண்டதும், தோனியிடம் பாகிஸ்தான் வீரர்கள் பேசியதும் உண்மையில் ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட்டின் உதாரணங்கள். கிரிக்கெட் ஒரு விளையாட்டு போர் அல்ல, என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தும் தருணமாக அமைந்தது.

    ஷோயப் மாலிக் 2007 உலகக்கோப்பை பாகிஸ்தான் அணியில் இருந்த போதுதான் தோனி தலைமையில் தென் ஆப்பிரிக்காவில் இந்தியா முதல் டி20 உலகக்கோப்பையை வென்றது, இப்போது தோனி மெண்ட்டார், ஷோயப் மாலிக் இன்னமும் ஆடிக்கொண்டிருக்கிறார். அதனால் ஒரு கால நண்பர்களாகவும் மாலிக்கும், தோனியும் இருந்திருக்கலாம்.







    தோனியுடன் பாகிஸ்தான் வீரர்கள் பேசிய உரையாடல் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அனைவருக்கும் பாகிஸ்தான் வீரர்களின் இந்தச் செய்கை மிகவும் பிடித்திருந்தது.

    பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்து அணியுடன் நாளை, செவ்வாயன்று மோதுகிறது. ஞாயிறன்று இதே துபாயில் இந்திய அணி நியூசிலாந்து அணியை சந்திக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: