• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • India vs Pakistan T20 WC-  ரசிக உள்ளங்களை அள்ளிய கோலியின் செய்கை- வீடியோ

India vs Pakistan T20 WC-  ரசிக உள்ளங்களை அள்ளிய கோலியின் செய்கை- வீடியோ

கோலியின் செய்கையில் ரசிகர்கள் ஆறுதல்

கோலியின் செய்கையில் ரசிகர்கள் ஆறுதல்

  • Share this:
    இந்திய அணியை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் முதல் முறையாக வென்றது, அதுவும் நோ-லாஸில் பெரிய வெற்றி. இதனையடுத்து பாகிஸ்தான் தொடக்க வீரர் மொகமட் ரிஸ்வானை இந்திய கேப்டன் விராட் கோலி கட்டிப்பிடித்து பாராட்டியது ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுள்ளது.

    மொகமட் ரிஸ்வான் வின்னிங் ஷாட்டை அடித்தவுடனேயே பாகிஸ்தான் ஓய்வறை அலை எழுச்சி கண்டது. துபாய் ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு தாங்கள் காண்பது கனவா அல்லது நினைவா என்று கிள்ளிப் பார்த்துக் கொண்டனர். கடைசியாக இந்தியாவை பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி ஒன்றில் வீழ்த்தியதே என்று அவர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.





    விராட் கோலி நேராக ரிஸ்வான் அருகில் சென்று பக்கவாட்டிலிருந்து அவரைக் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் உடனிணைய மூவரும் சிறிது பேசினர், கோலி முகத்தில் பெரிய புன்னகை. உண்மையான பாராட்டு அவர் முகத்தில் தெரிந்தது. இந்தப் புகைப்படம், வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கோலியின் செய்கை ரசிகர்களின் நெஞ்சங்களை அள்ளியுள்ளது.

    கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இந்திய அணியின் வெற்றி ஆதிக்கத்தை பாகிஸ்தான் நேற்று முடிவுக்குக் கொண்டு வந்தது. அதுவும் நோ-லாசில் வென்றதுதான் இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கு ஆறாத புண்ணாகியுள்ளது. ரிஸ்வான் 79 ரன்களையும் பாபர் அசாம் 68 ரன்களையும் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றி பெறச் செய்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: