• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Ind vs Pak, T20 World Cup 2021: செம டீமை இறக்குவேன், ஆனா அதை இப்ப சொல்ல மாட்டேன்: விராட் கோலி

Ind vs Pak, T20 World Cup 2021: செம டீமை இறக்குவேன், ஆனா அதை இப்ப சொல்ல மாட்டேன்: விராட் கோலி

இந்தியா vs பாகிஸ்தான்

இந்தியா vs பாகிஸ்தான்

  • Share this:
    இந்திய அணியில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர்கள் இருக்கிறார்கள், ஒரு டீமை மனதில் வைத்திருக்கிறேன் அதை இப்போது சொல்ல மாட்டேன் என்று இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பைப் போட்டிக்கு முன் பீடிகை போட்டுள்ளார் விராட் கோலி.

    டி20 உலகக்கோப்பையில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் முதல் போட்டியில் களம் காண்கின்றன. இதுவரை உலகக்கோப்பைப் போட்டிகளில் 5 முறை மோதி இந்திய அணி 5 முறையும் வென்றுள்ளது, இன்றும் அதே நிலை தொடரும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பெரிய அணியை களமிறக்குகிறார். பதிலுக்கு இந்திய அணி எப்படி அமையும் என்பது ஆவலாக இருக்கும் நிலையில் விராட் கோலி பீடிகை போட்டுளார்.

    “என்னைப்பொறுத்தவரையில் பாகிஸ்தான் அணி வலுவானது. நீண்டகாலமாகவே வலுவாக உள்ள அணி. திறமை அதிகம் இருப்பதால் நாம் நம் சிறந்த கேமை ஆட வேண்டும். அவர்களிடமும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தானை எதிர்கொள்ள நம் சிறந்த திட்டத்தை வடிவமைப்பதோடு அதை சரியாக அமல் படுத்த வேண்டும்.

    சீரான முறையில் ஆடினால் நிச்சயம் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். எனவே நிச்சயமாக ஏ-தரமான ஆட்டத்தை கொண்டு வரவேண்டும். நாங்கள் இந்திய அணியில் யார் யார் என்று விவாதித்துள்ளோம், அதை இப்போது கூற மாட்டேன். ஆனால் நிச்சயமாக சமச்சீரான அணியாக இருக்கும். அனைத்து துறையையும் கவர் செய்யும் அணியாக அது இருக்கும்.

    ஐபிஎல் உட்பட நிறைய கிரிக்கெட்டில் ஆடிவருகிறோம். இப்போது செயல்படுத்துவதுதான் மீதியுள்ளது. யார் யார் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்கெனவே தீர்மானித்து விட்டோம். ஹர்திக் பாண்டியா இப்போது இருக்கும் நிலையில் தொடரில் எப்போதாவது தேவைப்பட்டால் 2 ஓவர்கள் வரை வீச சாத்தியமுள்ளது. வேறு தெரிவும் உள்ளது.

    ஆனால் பேட்டிங்கில் நம்பர் 6-ல் அவர் ஆடுவது அணிக்கு பெரிய பலம், அதை வேறு யாரும் செய்ய முடியாது. அதனால்தான் ஆஸ்திரேலியாவில் அவரை பேட்டராக ஆதரித்தேன். அப்போது எதிரணியிடமிருந்து எப்படி ஆட்டத்தைப் பறித்தார் என்பதைப் பார்த்தோம். உலக கிரிக்கெட்டில் 6ம் நிலை என்பது ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மென் இறங்கும் டவுனாகும். அவர் மிகவும் உத்வேகமாக இருக்கிறார், 2 முக்கியமான ஓவர்களை அவர் வீசுவார்” என்றார் விராட் கோலி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: