Home /News /sports /

ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி அவுட் ஆன ரிஷப் பண்ட்: ரோஹித் சர்மா கண்டிப்பு- வைரலான வீடியோ

ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி அவுட் ஆன ரிஷப் பண்ட்: ரோஹித் சர்மா கண்டிப்பு- வைரலான வீடியோ

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி அவுட் ஆன போது ட்ரெஸ்ஸிங் ரூமில் அவருடன் வாக்குவாதம் புரிந்த வீடியோ வைரலாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ரோஹித் சர்மாவை முன்னாள் கேப்டன் ‘கூல்’ தோனியுடன் பலரும் ஒப்பிட்டு வரும் நிலையில்  பாகிஸ்தானுக்கு எதிராக மிகவும் டைட் ஆன போட்டியில் அர்ஷ்தீப் சிங் கேட்ச் விட்ட போது கடுமையாக ரோஹித் கோபப்பட்டார்,  அதே போல் ரிஷப் பண்ட் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி அவுட் ஆன போது ட்ரெஸ்ஸிங் ரூமில் அவருடன் வாக்குவாதம் புரிந்த வீடியோ வைரலாகியுள்ளது.

    முன்னாள் கேப்டன் விராட் கோலி 44 பந்தில் 60 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ரோஹித் சர்மா 16 பந்தில் 28 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), லோகேஷ் ராகுல் 20 பந்தில் 28 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஷதாப் கான் 2 விக்கெட்டும், நசிம் ஷா முகமது ஹஸ்னைன், ஹாரிஸ் ரஜப், முகமது நவாஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். ரிஷப் பண்ட் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடப்போய் பாயிண்டில் எளிதான கேட்சுக்கு வெளியேறினார்.

    ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஏமாற்றமளித்ததுதான் இந்திய அணியின் தோல்விக்குக் காரணமாக இருந்தது. அனைத்துக்கும் மேலாக விராட் கோலி அவர் பாணியில் ஆடிக்கொண்டிருந்தவர் திடீரென தோனி பாணியில் பாதுகாப்பான ஆட்டத்துக்குச் சென்றார். இதனால் டாட்பால்கள் பெருக, ஸ்கோர் 195-196 செல்ல வேண்டியது, 181 ரன்களுக்குள் முடிந்து விட்டது. இந்தப் பிட்சில் இந்த டோட்டல் விரட்டக் கூடியதே என்பதை பாகிஸ்தான் நிரூபித்தது.

    இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மீது கேப்டன் ரோகித் சர்மா கடுமையாக கோபம் அடைந்தார். அவர் 12 பந்தில் 14 ரன் (2 பவுண்டரி) எடுத்தார். அவர் தேவையில்லாமல் மோசமான ஷாட் அடித்து ஆட்டம் இழந்தார்.

    ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி ரிஷப் பண்ட் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இதனால் ஆடுகளத்தில் இருந்து வந்த அவர் மீது ரோஹித் சர்மா கடுமையாக கோபம் அடைந்தார். வீரர்கள் அறைக்கு வந்த அவரிடம் இந்த மாதிரியான ஷாட்டை விளையாடியது ஏன்? என்று கேட்டு ரிஷப் பண்டிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதற்கு ரிஷப் பண்ட் ஏதோ பேச இருவரும் விவாதம் செய்யும் வீடியோ வெளியானது.



    ரிஷப் பண்ட் மீது ரோஹித் சர்மா கோபமடைந்தது நியாயமற்றது, அவரை முதல் போட்டியில் இறக்கியிருக்க வேண்டும், திடீரென ஒரு டென்ஷன் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இறக்கினால் பதற்றமடைந்து விட்டார், அந்த நேரத்தில் எப்படி ஆடுவது என்பது பெரிய குழப்பமே. பார்மில் உள்ள ஹர்திக் பாண்டியாவை இறக்கியிருக்க வேண்டும், கேப்டன்சி தவறை வீரர் நேர்மையாக ரன்களை விரைவில் எடுக்கும் முயற்சியை பொறுப்பின்மை என்று சாட முடியாது.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: India vs Pakistan, Rishabh pant, Rohit sharma

    அடுத்த செய்தி