• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Ind vs Pak: நீங்கள்தான் ‘வலிமை’- தோனியிடம் ‘வலிமை’ அப்டேட் கொடுத்த  பாகிஸ்தான் பவுலர்- வைரல் வீடியோ

Ind vs Pak: நீங்கள்தான் ‘வலிமை’- தோனியிடம் ‘வலிமை’ அப்டேட் கொடுத்த  பாகிஸ்தான் பவுலர்- வைரல் வீடியோ

தோனி - கோலி

தோனி - கோலி

பாகிஸ்தான் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷானவாஸ் தஹானி இந்திய அணியின் மெண்ட்டார் தோனியைப் பார்த்து ‘நீங்கள்தான் வலிமை’ என்று கூறினார், இவர் உற்சாகமடைந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

  • Share this:
    பாகிஸ்தான் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷானவாஸ் தஹானி இந்திய அணியின் மெண்ட்டார் தோனியைப் பார்த்து ‘நீங்கள்தான் வலிமை’ என்று கூறினார், இவர் உற்சாகமடைந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

    ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் கடந்த 17 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடுகின்றன. நேற்று ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்கா அணியை போராடி வென்றது, மே.இ.தீவுகள் அணி படுமோசமாக ஆடி இங்கிலாந்திடம் சக்க உதை வாங்கியது.

    இன்று உலகமே எதிர்பார்க்கும் பரம வைரிகளான இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷானவாஸ் தஹானி, எம்.எஸ். டோனியைப் பார்த்தவுடன் அவரை உற்சாகமாக அழைத்து, 'உங்கள் உடல் வலிமையாக உள்ளது' என்று கூறினார்.



    இதனைத் தொடர்ந்து கேப்டன் டோனி, 'இல்லை எனக்கு வயதாகிவிட்டது என நகைச்சுவையாக கூறினார். 'இல்லை, நீங்கள் முன்பைவிட வலிமையாக இருக்கிறீர்கள்' என்று கூறினார். பின்னர் சிரித்துக்கொண்டே செல்கிறார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Also Read: ind vs pak: டி20 உலகக்கோப்பை : இந்தியாவுக்கு எதிராக வலிமையான அணியை இறக்கிய பாகிஸ்தான்!
     Also Read: இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை யுத்தம்.. கடந்த கால வரலாறு சொல்வது என்ன?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: