• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ‘விராட் கோலி வந்தா என்ன? சூரியகுமார் யாதவ் இந்த டவுனில்தான் இறங்குவார்’

‘விராட் கோலி வந்தா என்ன? சூரியகுமார் யாதவ் இந்த டவுனில்தான் இறங்குவார்’

சூரியகுமார் யாதவ்

சூரியகுமார் யாதவ்

  • Share this:
    சூரியகுமார் யாதவ் நேற்று நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பிரமாதமாக ஆடி வெற்றி பெறச் செய்ததில் மிகப்பெரிய பங்களிப்பு செய்ததையடுத்து விராட் கோலி டி20-க்கு வந்தாலு சூரியகுமார் யாதவ் தான் 3ம் நிலையில் இறங்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    மிட்விக்கெட் மீது கிளிப் ஷாட்களை பிரமாதமாக ஆடி 40 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார் சூரியகுமார் யாதவ் ஆனால் ஆட்டத்தை பினிஷ் செய்யாமல் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கொஞ்சம் கடினமாகி கடைசி ஓவரில் 10 ரன்கள் என்ற நிலை உருவாக, வெங்கடேஷ் அய்யரின் பவுண்டரி டேரல் மிட்செலின் இரண்டு பெரிய வைடுகள், ரிஷப் பண்ட்டின் வின்னிங் ஷாட் என்று 2 பந்துகள் மீதம் வைத்து இந்தியா த்ரில் வெற்றி கண்டது.

    இந்நிலையில் கவுதம் கம்பீர் கூறும்போது, “அவரிடம் நிறைய ஷாட்கள் உள்ளன. ஸ்பின்னை பிரமாதமாக ஆடுகிறார். அவரிடம் அனைத்து ஷாட்களும் உள்ளன. அவர் 360 டிகிரி பிளேயர். அதுதான் பந்து வீசக் கடினமான வீரராக அவர் இருப்பதற்குக் காரணம். விராட் கோலி மீண்டும் அணிக்குள் வந்தாலும் பரவாயில்லை சூரிய குமார் யாதவ்தான் இந்த டவுனில் இறக்கப்பட வேண்டும். விராட் கோலி சூரியகுமாருக்கு அடுத்துதான் களமிறங்க வேண்டும்.

    ரோகித் சர்மா கே.எல்.ராகுல் தொடக்கத்தில் சரவெடி ஆட்டம் காட்டுகின்றனர். அப்போது சூரியகுமார் 3ம் நிலையில் இறங்கினால்தான் அதே வேகத்தைக் கொண்டு செல்ல முடியும். விராட் கோலி 4ம் நிலையில் நின்று ஒரு முனையை ஒருங்கிணைத்துக் கொண்டு செல்ல வேண்டும். ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவுக்கு எப்படி செயல்படுகிறாரோ கோலி அப்படிச் செயல்படலாம். முதலில் 2 விக்கெட்டுகளை விரைவில் இழந்தோமானால் விராட் கோலி மிடில் ஆர்டரை திறம்பட கொண்டு செல்வார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நான் அவரை இந்த நிலையில் பயன்படுத்தாதற்கு வருந்துகிறேன். அவரை வேறு அணிக்குச் செல்ல விட்டிருக்கக் கூடாது என்பதையும் இப்போது உணர்கிறேன். அப்போது மணீஷ் பாண்டே, யூசுப் பதான் ஆகிய வீரர்கள் இருந்ததனால் சூரியகுமாரை பினிஷராகப் பயன்படுத்தினேன். கேகேஆருக்கு சூரியகுமார் யாதவ் இல்லாமல் போனது பெரிய நஷ்டம்.” என்று உண்மையில் மனம் வருந்தி பேசினார் கவுதம் கம்பீர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: