• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Ind vs NZ: சூப்பர் சிக்ஸர்! நியூசிலாந்தின் இதயத்தை நொறுக்கிய ரோகித் சர்மாவின் சூப்பர் ஓவர் சிக்ஸ்- வீடியோ

Ind vs NZ: சூப்பர் சிக்ஸர்! நியூசிலாந்தின் இதயத்தை நொறுக்கிய ரோகித் சர்மாவின் சூப்பர் ஓவர் சிக்ஸ்- வீடியோ

ரோகித் சர்மாவின் சூப்பர் ஓவர் சூப்பர் சிக்ஸ்

ரோகித் சர்மாவின் சூப்பர் ஓவர் சூப்பர் சிக்ஸ்

  • Share this:
    கடந்த ஆண்டு ஹாமில்டனில் நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து டி20 போட்டித் தொடரில் சூப்பர் ஓவரில் அடித்த வெற்றி சிக்சரை டி20 உலகக்கோப்பை 2021 தருணத்தில் நினைத்துப் பார்க்கும் போது நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரசிகர்கள் பலருக்கும் நம்பிக்கை பிறக்கும்.

    பாகிஸ்தானுடன் 12 போட்டிகளுக்கு பிறகு உலகக்கோப்பையில் தோற்றது இந்திய அணி, இதனையடுத்து 2வது போட்டி வரும் ஞாயிறன்று 31ம் தேதி நடைபெறுகிறது, இதில் இந்திய அணி வெற்றி பெற்றேயாக வேண்டும். இல்லையெனில் அரையிறுதி வாய்ப்புக் கடினமாகும். இதை நிச்சயம் இந்தியா விரும்பாது, ரோகித் சர்மா அன்று டக் அவுட் ஆகி ஷாகின் அப்ரீடியிடம் வீழ்ந்தார். நியூசிலாந்துக்கு எதிராக நிச்சயம் காட்டு காட்டென்று காட்டுவார் என்பது ஹிட்மேன் ரசிகர்களின் அவா.

    கடந்த தொடரில் நியூசிலாந்தில் டி20 தொடரை இந்தியா முதன் முதலாக அங்கே வெல்ல ரோகித் சர்மாவின் இந்த சூப்பர் ஓவர் சிக்சர்கள்தான் பங்களிப்பு செய்தன, அதே போன்ற ஒரு ஹீராயிக் இன்னிங்ஸை இப்போதும் ரோகித்திடம் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 3வது டி20 போட்டியில் ரோகித் சர்மா 2 சிக்சர்களை அடுத்தடுத்து சூப்பர் ஓவரில் அடித்து அபார வெற்றி பெறச் செய்தார்.

    ஹாமில்டனில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த விராட் கோலி படை 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ஆனால் அங்கு கேப்டன் கேன் வில்லியம்சன் சொல்லொணா பார்மில் இருந்தார், 48 பந்துகளில் 95 ரன்களை விளாச நியூசிலாந்து அணியும் 179/4 என்று முடிந்தது. ஸ்கோர் சமனில் முடிந்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது.

    அந்த சூப்பர் ஓவரின் வீடியோ; இந்தியா-நியூசி. சூப்பர் ஓவர் வீடியோ:



    சூப்பர் ஓவரில் நியூசிலாந்து முதலில் பேட் செய்தது, ஜஸ்பிரித் பும்ராவை சாத்தி எடுத்தனர், கேன் வில்லியம்சன் மீண்டும் 11 ரன்கள் எடுக்க நியூசிலாந்து 17 ரன்களை எடுத்தது. மீண்டும் இந்தியா பேட் செய்த போது டிம் சவுதி ஓவரின் முதல் 4 பந்துகளில் இந்தியா 10 ரன்களை எடுத்திருந்தது. கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் தேவை. ஆனால் ரோகித் சர்மா 5வது பந்தில் சிக்ஸ் அடித்தார், கடைசி பந்தில் விறுவிறுப்பான கணத்தில் மீண்டும் ஒரு சிக்சரை விளாசினார் ரோகித் சர்மா இந்திய அணி அபார வெற்றி பெற்று முதன் முதலாக டி20 தொடரை நியூசிலாந்து மண்ணில் கைப்பற்றியது.

    இந்நிலையில்தான் ஐசிசி டி20 உலகக்கோப்பைப் போட்டித்தொடரில் நியூசிலாந்தை இந்திய அணி சந்திக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: