நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வொயிட்-வாஷ் செய்த நிலையில், முதல் டி20 போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. முதலில் டாஸில் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை மட்டுமே எடுத்தது.
நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் 20 ரன்னுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். இந்திய அணியின் தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 70 ரன்னுக்கு 4 விக்கெட்களை இழந்தது. சூர்ய குமாருடன் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இணைந்து பொறுப்புடன் விளையாட 19.5 ஆவது ஓவரில் இந்திய அணி 101 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை வென்றது. சூர்ய குமார் யாதவ் 26 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த போட்டியில் மொத்தம் 239 பந்துகள் வீசப்பட்டன. ஆனால் எந்த பேட்ஸ்மேனும் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. டெஸ்ட் மேட்ச் பார்ப்பது போல இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர். இது “டி20 போட்டிக்கு தயார் செய்யப்பட்ட பிட்ச் இல்லை” என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரும் இது டி20க்கான பிட்ச் இல்லை என கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்தியாவில் உள்ள பிட்ச்கள் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் கிரிக்கெட் வீரர்கள் இந்த கருத்துக்கள் கூறுவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் வரும் புதன் அன்று நடைபெறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BCCI, Hardik Pandya, Ind vs NZ, India vs New Zealand, Indian cricket team