Home /News /sports /

IND vs NZ : என் பந்துகளை மைதானத்துக்கு வெளியே அடித்தீர்கள் சேவாக்- அஜாஸ் படேல் ருசிகரம்

IND vs NZ : என் பந்துகளை மைதானத்துக்கு வெளியே அடித்தீர்கள் சேவாக்- அஜாஸ் படேல் ருசிகரம்

சேவாக் அடியை நினைவு கூர்ந்த் அஜாஸ் படேல்

சேவாக் அடியை நினைவு கூர்ந்த் அஜாஸ் படேல்

மும்பை டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவில் சாதனை புரிந்த அஜாஸ் படேல், தான் நெட் பவுலராக இருந்த போது சேவாக் தன் பந்துகளை மைதானத்துக்கு வெளியே தூக்கித் தூக்கி அடித்ததை நினைவு கூர்ந்துள்ளார்.

    மும்பை டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவில் சாதனை புரிந்த அஜாஸ் படேல், தான் நெட் பவுலராக இருந்த போது சேவாக் தன் பந்துகளை மைதானத்துக்கு வெளியே தூக்கித் தூக்கி அடித்ததை நினைவு கூர்ந்துள்ளார்.

    இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மும்பை டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய அஜாஸ் படேல், அனில் கும்ப்ளே, ஜிம் லேக்கருக்கு அடுத்தபடியாக சாதனை நிகழ்த்தினார், அதே டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸிலும் இந்திய அணி இழந்த 7 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஒரே டெஸ்ட் போட்டியில் 14 விக்கெட்டுகளை வெளி மண்ணில் தோற்ற டெஸ்ட்டில் கைப்பற்றியவகையில் உலக சாதனை நிகழ்த்தினார் அஜாஸ் படேல்.

    இந்த அதிசய இடது கை சுழற்பந்து வீச்சாளரைப் பாராட்டி விரேந்திர சேவாக், "கிரிக்கெட்டில் சாதிக்க மிகவும் கடினமான ஒன்று ஒரு இன்னிங்சில் அனைத்து 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றுவது. உன் வாழ்க்கையில் இது நினைவு வைத்துக் கொள்ளக்கூடிய ஒருநாள். மும்பையில் பிறந்து மும்பையிலேயே வரலாறு படைத்தாய். வரலாற்றுச் சாதனைக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டார்.

    சேவாகின் இந்தப் பதிவுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்ட அஜாஸ் படேல், “நன்றி! ஒரு வேடிக்கை கதை. நான் நெட் பவுலராக வீசிய போது ஓவலுக்கு வெளியே ஈடன் பார்க்கில் என் பந்துகளை நீங்கள் மைதானத்துக்கு வெளியே அடித்துக் கொண்டிருந்தீர்கள் எனக்கு இது இன்னமும் நினைவில் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

    2009-ல் நியூசிக்கு எதிராக 60 பந்துகளில் சதம் கண்டார் சேவாக்.


    இதற்கும் பதிலளித்த சேவாக், “காலத்துக்கு ஒரு பழக்கம் உண்டு, அது என்னவென்றால் அது மாறிக்கொண்டேயிருக்கும். இந்தியா வெற்றி பெற்றாலும் உங்கள் சாதனை அசாதாரணமானது. இன்னும் உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் நீங்கள் மேலும் வெற்றி நடைபோட வாழ்த்துகிறேன்.. குட் லக்” என்று சேவாக் மீண்டும் டிவீட் செய்துள்ளார்.

    இதையும் படிங்க: Ashes 2021-22- இங்கிலாந்து அதிர்ச்சி; முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸ் பவுல்டு, ஜோ ரூட் டக் அவுட்

    இந்திய ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை அஜாஸ் படேலுக்கு பரிசாக அளித்தார். படேலுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் இந்த டெஸ்ட் போட்டியின் அதிகாரபூர்வ ஸ்கோர் ஷீட்டையும் ஒரு நினைவுப்பரிசையும் வழங்கி கவுரவித்தது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs New Zealand, Virender sehwag

    அடுத்த செய்தி