• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • விராட் கோலி வைத்திருந்த இந்த ரெக்கார்டும் போச்சா, தகர்த்த ரோகித் சர்மா- 150 சிக்சர்கள் சாதனை

விராட் கோலி வைத்திருந்த இந்த ரெக்கார்டும் போச்சா, தகர்த்த ரோகித் சர்மா- 150 சிக்சர்கள் சாதனை

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

  • Share this:
    நியூசிலாந்துக்கு எதிராக 3-வது டி20 போட்டியில் அரைசதம் கண்டு தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் இந்திய டி20 கேப்டன் ரோகித் சர்மா, இந்த இன்னிங்சில் விராட் கோலியின் மிகப்பெரிய டி20 சர்வதேச சாதனயைத் தகர்த்தார்.

    விராட் கோலி டி20 சர்வதேசப் போட்டிகளில் எடுத்த அரைசதங்கள் எண்ணிக்கையை முந்தினார் ரோகித் சர்மா. ஷார்ட்டெஸ்ட் வடிவத்தில் ரோகித் சர்மா 25 அரைசதங்களையும் 5 சதங்களையும் எடுத்து 30 என்ற எண்ணிக்கையை எட்ட விராட் கோலி 29 அரைசதம் மற்றும் அதைத் தாண்டிய ஸ்கோர்களை எடுத்துள்ளார்.

    டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக அரைசதம் மற்றும் அதற்குக் கூடுதலான ஸ்கோர் எடுத்தவர்கள்:

    ரோகித் சர்மா - 25 அரைசதங்கள் 5 சதங்கள்- மொத்தம் 30.

    விராட் கோலி - 29 அரைசதங்கள்

    பாபர் ஆசம் - 24 அரைசதங்கள் ஒரு சதம் - 25.

    டேவிட் வார்னர் 21 அரை சதங்கள் 1 சதம்- 22.

    அதிக சிக்சர்கள்

    ரோகித் சர்மா நேற்று தன் 31 பந்து 56 ரன்களில் 5 பவுண்டரி 3 சிக்சர்கள் அடித்தார். இந்த 3 சிக்சர்களுடன் அவர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 150 சிக்சர்களை அடித்துள்ளார். 150 சிக்சர்கள் மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் ஆனார் ரோகித் சர்மா.

    மார்டின் கப்டில் 161 சிக்சர்களுடன் முதலிடம் வகிக்க ரோகித் 150 சிக்சர்களுடன் 2ம் இடத்தில் இருக்கிறார். கிறிஸ் கெய்ல் 124 சிக்சர்களுடன் 3ம் இடத்திலும் இயான் மோர்கன் 119 சிக்சர்களுடன் 4ம் இடத்தில் இருக்கிறார்.

    இதையும் படிங்க: Rahul Dravid| நியூசிலாந்து வீரர்களை மனிதாபிமானத்துடன் பார்க்கும் ராகுல் திராவிட்

    ரோகித் சர்மா இன்னும் 31 ரன்கள் எடுத்தல் அதிக டி20 சர்வதேசப் போட்டி ரன்கள் என்ற சாதனையையும் கோலியைக் கடந்து முறியடிப்பார். 2020-ல் நியூசிலாந்தில் 5-0 என்ற கிளீன் ஸ்விப்புக்குப் பிறகு இப்போது 3-0 கிளீன் ஸ்வீப்.

    Also Read: இந்தியா 3-0 கிளீன் ஸ்வீப் வெற்றி- ரோகித் சர்மா படை அசத்தல் - கப்டில் 51, மற்றவர்கள் அனைவரும் 60

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: