முகப்பு /செய்தி /விளையாட்டு / ஸ்ரேயஸ் ஐயர், தவான் அதிரடி - நியூசிலாந்து அணிக்கு 307 ரன்கள் இலக்கு

ஸ்ரேயஸ் ஐயர், தவான் அதிரடி - நியூசிலாந்து அணிக்கு 307 ரன்கள் இலக்கு

இந்தியா, நியூசிலாந்து

இந்தியா, நியூசிலாந்து

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில், வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • internat, IndiaAucklandAuckland

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று தொடங்கியது.

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி, நிதானமாக விளையாடியது.

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில், வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் அறிமுக வீரர்களாக களமிறங்கியுள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், சுப்மான் கில்-லும் களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஷிகர் தவான் 72 ரன்களிலும், சுப்மான் கில் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்களை சேர்த்திருந்தது.

top videos

    இதையடுத்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியுள்ளது.

    First published:

    Tags: Cricket match, Ind vs NZ, One day match