ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்…

காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்…

பயிற்சியின்போது ஷ்ரேயாஸ் ஐயர்

பயிற்சியின்போது ஷ்ரேயாஸ் ஐயர்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காயம் காரணமாக இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது- முதுகு வலி காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்க மாட்டார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார். ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரஜத் பட்டிதார் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்படவுள்ளார். என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் 3 போட்டிகளிலும் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் காயம் காரணமாக அவர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. டி20 தொடர் இம்மாதம் 27 ஆம் தேதி ஆரம்பமாகிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் – ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ரஜத் பட்டிதார், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகம்மது சிராஜ், உம்ரான் மாலிக்.

First published:

Tags: Cricket