ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs NZ | நியூசிலாந்து பேட்டிங் தேர்வு... இந்திய அணியில் முக்கிய மாற்றம்.. மழையால் ஆட்டம் தாமதம்

Ind vs NZ | நியூசிலாந்து பேட்டிங் தேர்வு... இந்திய அணியில் முக்கிய மாற்றம்.. மழையால் ஆட்டம் தாமதம்

IND vs NZ

IND vs NZ

இந்திய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் டி20 தொடரில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2-வது டி20 போட்டியில் இந்திய அணி சூர்யகுமார் யாதவின் அதிரடியான சதத்தால் அபார வெற்றி பெற்றது.

  இதையடுத்து கடைசி மற்றும் இறுதி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இன்றைய போட்டியில் இடம்பெறாததால் டிம் சவுதி அணியை வழிநடத்துகிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி அடைந்தால் தொடரை வெல்லும். அதே சமயம் சொந்த மண்ணில் தோல்வியை தவிர்க்க நியூசிலாந்து அணி போராடு என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

  இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்சல் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். நியூசிலாந்து பிட்ச்கள் பொதுவாக முதலில் பேட்டிங் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். இராண்டவது பாதியில் பந்து பவுன்சிங் மற்றும் நன்றாக ஸ்விங் ஆகும் என்பதால் இந்திய அணிக்கு இன்றை போட்டி கடும் சவாலாகவே இருக்கும்.

  இந்நிலையில் மழை காரணமாக இன்றைய போட்டி தொடங்குவதில் தாமதமாகி உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் போட்டி ரத்து செய்யப்படவும் அல்லது ஓவர்கள் குறைக்கப்படவும் வாய்ப்புள்ளது.

  இந்திய அணி : இஷான் கிஷன், ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்

  நியூசிலாந்து அணி : ஃபின் ஆலன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, இஷ் சோதி, டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன்

  Published by:Vijay R
  First published:

  Tags: Ind vs NZ