ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய ஸ்பின் பவுலிங்கை வேற மாதிரி ‘ஹேண்டில்’ பண்ணனும்- கேன் வில்லியம்சன்

இந்திய ஸ்பின் பவுலிங்கை வேற மாதிரி ‘ஹேண்டில்’ பண்ணனும்- கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ரிஷப் பண்ட், ஷமி இல்லாததால் நாங்கள் தான் இந்தத் தொடரை வெல்வோம் என்று கூறுதல் கொஞ்சம் ஓவர்தான். நாங்கள் வெற்றி பெறுவதற்கு சாதகமான அணி அல்ல.

 • Cricketnext
 • 2 minute read
 • Last Updated :

  இந்திய ஸ்பின் மும்மூர்த்திகளான அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரின் பந்து வீச்சுகளை கையாள வித்தியாசமான, வேறு வேறு உத்திகளையே கடைப்பிடிக்க வேண்டும் என்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.

  கடந்த முறை 2016 டெஸ்ட் தொடரில் அஸ்வின் 27 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஜடேஜா 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணி 3-0 என்று டெஸ்ட் தொடரை இழந்தது. இந்நிலையில் இந்த முறை இந்திய ஸ்பின் பவுலிங்குக்கு எதிராக வேறு வேறு உத்திகளைக் கடைப்பிடிப்பது பற்றி கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்:

  “இதிய ஸ்பின் பவுலர்களின் பலம் என்ன என்பது தெரியும். நீண்ட காலமாக அவர்கள் சிறப்பாக வீசி வருகின்றனர். எங்களை பொறுத்தவரை அவர்களுக்கு எதிராக வேறு வேறு உத்திகளுடன் களமிறங்க வேண்டும். ஸ்கோர் செய்வதற்கான வழிமுறைகளைக் கையாள வேண்டும். திறம்பட ஆடி கூட்டணிகளை அமைக்க வேண்டும்.

  ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு ரகம் எனவே ஒவ்வொரு வீரர் ஆடுவதும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எனவே சவால்களுக்கு தயார் படுத்திக் கொள்வது பற்றி நிறைய விவாதித்தோம். இந்தத் தொடர் முழுதுமே ஸ்பின் பவுலிங் ஒரு பெரிய காரணியாக இருக்கும். கான்பூரில் என்ன வித்தியாசமாக இருந்து விடப்போகிறது?

  கடந்த முறை ஆடியதை விட கொஞ்சம் மாற்றம் இருக்கிறது. சூழ்நிலையை விரைவில் மதிப்பிடுவதில்தான் உள்ளது. அதற்கேற்ப விரைவில் தகவமைத்துக் கொள்ள வேண்டும். இந்த பிட்ச்களில் பந்து புதிதாக இருந்தாலும் பழையதானாலும் பெரிய காரணிகளாக இருக்கும், இங்கு என்ன பிரச்சனை என்னவெனில் ஒரு பந்து பெரிய அளவில் ஸ்பின் ஆகும் அடுத்த பந்தே ஸ்பின் ஆகாமல் நேராக வரும்.

  எனவே திட்டமிடுதலுடன் இறங்க வேண்டும். மற்ற அணிகளும் இங்கு பெரிய சவால்களை சந்தித்திருக்கின்றன. எனவே எதிர்பார்ப்பில் மாற்றமிருக்காது, ஸ்பின் தான் ஆதிக்கம் செலுத்தும். நாங்களும் அதற்கு தயார் தான். நன்றாக தயாரித்துக் கொண்டுள்ளோம். கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ரிஷப் பண்ட், ஷமி இல்லாததால் நாங்கள் தான் இந்தத் தொடரை வெல்வோம் என்று கூறுதல் கொஞ்சம் ஓவர்தான். நாங்கள் வெற்றி பெறுவதற்கு சாதகமான அணி அல்ல.

  எங்களைப்பொறுத்தவரை அடிப்படைகளை சரியாகச் செய்து மற்றபடி காத்திருப்பதே. நாங்கள் ரொம்பவெல்லாம் யோசிப்பதில்லை, பாலம் வரட்டும் கடப்போம் என்ற அணுகுமுறைதான்” என்றார் வில்லியம்சன்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Kane Williamson