முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்.. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டி இன்று!

இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்.. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டி இன்று!

கிரிக்கெட்

கிரிக்கெட்

IND vs NZ : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டி மதியம் 1.30 மணியளவில் தொடங்குகிறது. இதற்கு முன்பாக 1 மணிக்கு டாஸ் போடப்படும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா- நியூசிலாந்து இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர், இன்று தொடங்குகிறது. இதில், காயம் காரணமாக, இந்திய வீரர் ஷ்ரேயஸ் அய்யர் நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, தலா 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடர்களில் பங்கேற்கிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி, ஹைதராபாத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கெனவே இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இந்திய அணி, நியூசிலாந்து தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில், முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஒரு நாள் தொடரிலிருந்து பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் அய்யர் நீக்கப்பட்டுள்ளார். பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு ஷ்ரேயஸ் அய்யர் செல்ல உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக, ஒரு நாள் தொடரில் மத்தியப்பிரதேச வீரர் ரஜத் பதிதார் சேர்க்கப்பட்டுள்ளார்.

முக்கிய வீரர்களின் விலகல் காரணமாக இளம் வீரர்களுக்கு  அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேச தொடரில் கலக்கிய இஷான் கிஷன் அணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கும், சூர்ய குமாருக்கும் முழு வாய்ப்பு வழங்கப்படலாம். இலங்கை தொடரைப் போலவே நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டி மதியம் 1.30 மணியளவில் தொடங்குகிறது. இதற்கு முன்பாக 1 மணிக்கு டாஸ் போடப்படும்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுவதையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட் வொர்க் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஆன்லைனில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்த்து மகிழலாம்.

First published:

Tags: Cricket