Ind vs NZ | விக்கெட் கீப்பராக தோனி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

Ind vs NZ | விக்கெட் கீப்பராக தோனி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!
கே.எல்.ராகுல்
  • Share this:
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விக்கெட் கீப்பராக விளையாடிய கே.எல்.ராகுல் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. அதையடுத்து 3  போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 347 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் 88 ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகமல் களத்தில் இருந்தார். இதுவே நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் அடித்த அதிகப்பட்ச ரன்னாகும்.


இதற்கு முன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 85 ரன்கள் அடித்திருந்தார். அதை தற்போது கே.எல். ராகுல் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய விக்கெட் கீப்பர்கள் அடித்த அதிகபட்ச ரன்

கே.எல்.ராகுல் - 88*தோனி - 85*
தோனி - 84*
தோனி - 79*
தோனி - 68
தோனி - 56
தோனி - 50
First published: February 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading