எல்லாருக்கும் அதே நிலைமைதான்: தோல்விக்குப் பின் ரோகித் சமாளிப்பு!

One of our worst batting performances: #RohitSharma | 4-வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #NZvIND #4thODI

எல்லாருக்கும் அதே நிலைமைதான்: தோல்விக்குப் பின் ரோகித் சமாளிப்பு!
ரோகித் சர்மா. (BCCI)
  • News18
  • Last Updated: January 31, 2019, 4:35 PM IST
  • Share this:
நியூசிலாந்து அணிக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு கேப்டன் ரோகித் சர்மா மழுப்பலான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என கைப்பற்றியது. இதனை அடுத்து, இரு அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி இன்று (ஜன.31) நடைபெற்றது.

New Zealand Team, நியூசிலாந்து அணி
ஆட்டமிழந்து வெளியேறும் ஷிகர் தவான். (BCCI)பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் செயல்பாடு குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

போட்டி முடிந்த பிறகு ரோகித் சர்மா கூறுகையில், “நீண்ட காலத்துக்குப் பிறகு இந்திய அணியின் மோசமான பேட்டிங் இது. இப்படி நடக்கும் என நினைக்கவில்லை. சிறப்பாக பந்துவீசிய நியூசிலாந்து வீரர்களுக்குப் பாராட்டுகள். தோல்விக்கு நாங்கள்தான் காரணம்” என்று தெரிவித்தார்.

Rohit Sharma, ரோகித் சர்மா
கேப்டன் ரோகித் சர்மா. (BCCI)
மேலும், “பந்து ஸ்விங் ஆகும்போது கவனமாக விளையாடியிருக்க வேண்டும். பந்து வேகமாக ஸ்விங் ஆகும்போது, எங்களுக்கு மட்டுமல்ல எந்த அணியாக இருந்தாலும் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. வெலிங்டனில் நடக்க இருக்கும் போட்டியில் தவறை சரி செய்துகொள்வோம்” என்று ரோகித் சர்மா கூறினார்.

ரோகித் சர்மாவின் மழுப்பலான பதில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. இதனால், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியை அடிச்சுத் தூக்கிய நெட்டிசன்கள்!

Also Watch...

First published: January 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்