ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IND vs NZ ODI : ரோஹித் சர்மா, சுப்மன் கில் சதம்… அதிரடி ரன் குவிப்பில் இந்திய அணி…

IND vs NZ ODI : ரோஹித் சர்மா, சுப்மன் கில் சதம்… அதிரடி ரன் குவிப்பில் இந்திய அணி…

ரோஹித் சர்மா - சுப்மன் கில்

ரோஹித் சர்மா - சுப்மன் கில்

ஒருநாள் போட்டியான இதில், டி20 மேட்ச்சைப் போன்று இந்திய அணி அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் சதம் விளாசியுள்ளனர். ஒருநாள் போட்டியான இதில், டி20 மேட்ச்சைப் போன்று இந்திய அணி அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.  இந்திய அணி தொடரை வென்றுள்ள நிலையில் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.  இன்றைய ஆட்டத்தில் 2 மாற்றங்களை கேப்டன் ரோஹித் சர்மா செய்திருந்தார். முகம்மது ஷமி மற்றும் சிராஜிற்கு பதிலாக உம்ரான் மாலிக் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தொடக்க வீரர்களாக களத்தில் இறங்கிய ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர், இருவரும் டி20 மேட்ச்சைப் போல விளையாட ஆரம்பித்து ரன்களை குவித்தார்கள். 6 ஓவர்கள் முடிவில் 31 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி 13 ஆவது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது. 33 பந்துகளில் சுப்மன் கில் அரைச் சதம் அடித்தார். 41 பந்துகளில் ரோஹித் சர்மா அரைச்சதம் கடந்தார். ஒவ்வொரு ஓவரிலும் சிக்சர் அல்லது பவுண்டரிகள் பறந்ததால் அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. 83 பந்துகளில் ரோஹித் சர்மா 6 சிக்சர் 9 பவுண்டரியுடன் சதம் விளாசி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கில், 72 பந்துகளில் சதம் அடித்தார். இதில், 4 சிக்சர்களும் 13 பவுண்டரிகளும் அடங்கும்.

ரோஹித் சர்மா 101 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பிரேஸ்வெல் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். இந்திய அணி தொடர்ந்து அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.

First published:

Tags: Cricket