ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IND vs NZ 3rd ODI : நியூசி.-க்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்…

IND vs NZ 3rd ODI : நியூசி.-க்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்…

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா - நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா - நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம்.

முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவது ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தற்போது தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்கிறது. இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2 மாற்றங்களை செய்துள்ளார். முகம்மது ஷமி மற்றும் சிராஜுக்கு இன்றைய போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக உம்ரான் மாலிக் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் விளையாடுகின்றனர்.

நியூசிலாந்து அணியில் ஹென்றி ஷிப்லேவுக்கு பதிலாக ஜேகப் டஃபி விளையாடுகிறார். டாஸிற்கு பின்னர் நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் கூறுகையில், ‘இந்தூர் மைதானம் அளவில் சிறியது. எனவே பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கிறோம். கடந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடினோம். அதே ஆட்டம் இன்றைக்கும் தொடரும். அணியில் ஒரு மாற்றம் செய்துள்ளோம். ஹென்றி ஷிப்லேவுக்கு பதிலாக ஜேகப் டஃபி விளையாடுகிறார்’ என்று கூறினார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், ‘நாங்கள் முதலில் பேட்டிங் செய்யத்தான் தீர்மானித்திருந்தோம். இந்த தொடரை சிறப்பாக விளையாடி முடிக்க விரும்புகிறோம். இந்த மைதானத்தில் பெரிய ஸ்கோர் அடிக்க முடியும். அணியில் 2 மாற்றங்கள். ஷமி, சிராஜுக்கு பதிலாக உம்ரான், சாஹல் விளையாடுகின்றனர் என்று கூறினார்.

இன்றைய ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணி வீரர்கள்-

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக்

நியூசிலாந்து அணி வீரர்கள்-

ஃபின் ஆலன், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம்(விக்கெட் கீப்பர்/கேப்டன் ), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன், ஜேக்கப் டஃபி, பிளேயர் டிக்னர்

First published:

Tags: Cricket