இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஒரு நாள் போட்டித் தொடரை வென்ற நிலையில், ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், தொடரை கைப்பற்றும் முனைப்பில் 2 ஆவது டி20 போட்டியை நியூசிலாந்து எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, தக்க பதிலடி கொடுக்க ஆயத்தமாகி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியின் தொடக்கவரிசை பேட்ஸ்மேன்கள் சோபிக்காததே தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. அதில் கற்ற பாடத்தின் மூலம் 2 ஆவது போட்டியில் சிறப்பாக செயல்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த போட்டியில் தோல்வியடைந்தால் இந்திய அணி டி20 போட்டிகளில் முதல் இடத்தை இழக்கும் நிலை உள்ளது. எனவே இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் நிச்சயம் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
உத்தேச 11 அணி:
இந்திய அணி : இஷான் கிஷன்(வி.கீ), சுப்மான் கில், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கே), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்
நியூசிலாந்து அணி : ஃபின் ஆலன், டெவோன் கான்வே(வி.கீ), மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கே), இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், பிளேயர் டிக்னர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BCCI, Hardik Pandya, Ind vs NZ, India vs New Zealand, Indian cricket team