இந்தியா-நியூசிலாந்து கான்பூர் முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மும்பை வீரர் ஷ்ரேயஸ் அய்யர் முதல் டெஸ்ட்டிலேயே அரைசதம் அடித்து அசத்தல் டெபூ கண்டுள்ளார். இது பிரமாதமான இன்னிங்ஸ். இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளாது.
ரஹானே (35) ஆட்டமிழ்ந்த பிறகு ஜோடி சேர்ந்த ஜடேஜா (20 நாட் அவுட்), ஷ்ரேயஸ் அய்யர் (50 நாட் அவுட்)) இருவரும் சேர்ந்து 5வது விக்கெட்டுக்காக 57 ரன்களைச் சேர்த்து ஸ்டெடி செய்து வருகின்றனர்.
உணவு இடைவேளையிலிருந்து தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 145/4 என்று சற்றே சரிவு நிலை கண்டது ஷ்ரேயஸ் அய்யர், ரகானே இணைந்து 39 ரன்கள் சேர்த்து கப்பலை கொஞ்சம் திசைவழிப்படுத்திய போது ரகானே 35 ரன்களில் கைல் ஜேமிசன் பந்தில் பிளேய்ட் ஆன் முறையில் பவுல்டு ஆனார்.
இந்தப் பந்துக்கு முன்னர்தான் லெக் திசையில் லேசாக மட்டையில் பட்டது என்று அப்பீல் செய்ய நடுவர் அவுட் கொடுத்தார், ஆனால் ரிவியூவில் அவுட் இல்லை என்று தீர்ப்பாக பிழைத்தார் ரகானே, ஆனால் அடுத்த பந்தே ஒன்றுமில்லாத பந்தில் கட் செய்கிறேன் பேர்வழி என்று வீதியில் போகும் ஓணானை வேட்டிக்குள் விட்ட கதையாக பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பவுல்டு ஆனார்.
கைல் ஜேமிசன் இன்று வீசிய சாதாரணமான பந்து அது, அதில் ரஹானே விக்கெட்டைக் கொடுத்து விட்டுச் சென்றார், நேர் மட்டையில் பின்னால் சென்று தள்ளி விட வேண்டிய பந்தை தாழ்வாக வந்ததையும் பொருட்படுத்தாமல் மட்டையை படுக்கை வசம் வைத்து ஸ்கொயர் கட் செய்ய முயன்று வாங்கி உள்ளே விட்டுக் கொண்டு பவுல்டு ஆகி வெளியேறினார். 63 பந்துகளை சந்தித்த ரகானே 35 ரன்கள் எடுத்து அதில் 6பவுண்டரிகள் அடித்து வெளியேறினார். தேவையில்லாத அவுட்.
ஷ்ரேயஸ் அய்யர் ஒரு கட்டுப்பாடுடன் கூடிய ஆக்ரோஷம் காட்டி ஆடுகிறார், அவர் 7 பவுண்டரிகளை விளாசியுள்ளார், சில சமயம் பின்னால் சென்று புல் ஷாட், கட் ஷாட், சில வேளைகளில் ஸ்பின்னர்களை மேலேறி வந்து தூக்கி அடிப்பது என்று நியூசிலாந்து பவுலிங்குக்கு போக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார் அய்யர். ஆனால் இவரும் ஒருமுறை நெருக்கமான எல்.பி.யிலிருந்து தப்பினார். அது பவுல்டு என்று காட்டினாலும் அம்பயர்ஸ் கால் ஆனதால் கேன் வில்லியம்சன் ரிவியூவை இழந்தார்.
நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சவுதீ 1 விக்கெட்டையும் கைப்பற்ற ஸ்பின்னர்களில் ஆஃப் ஸ்பின்னர் வில்லியம் சோமர் வில் மட்டும் நன்றாக வீசுகிறார், ராச்சின் ரவிந்திரா, அஜாஜ் படேல் சரியில்லை, ஆனால் 2வது இன்னிங்ஸில் இவர்களுக்கு ஸ்பின் எடுக்க வாய்ப்பிருக்கிறது. அதற்குள் இந்தியா பெரிய ஸ்கோரை எட்டி அவர்கள் இன்னிங்ஸ் தோல்வி அடையாமல் இருந்தால் சரி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.