ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs NZ | லாதம், வில்லியம்சன் அபாரம்... 307 ரன்கள் இலக்கை அசால்ட்டாக தட்டி தூக்கிய நியூசிலாந்து

Ind vs NZ | லாதம், வில்லியம்சன் அபாரம்... 307 ரன்கள் இலக்கை அசால்ட்டாக தட்டி தூக்கிய நியூசிலாந்து

Ind vs NZ

Ind vs NZ

India vs New Zealand | இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 307 என்ற இமலாய இலக்கை நியூசிலாந்து எளிதில் எட்டி வெற்றி பெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஹர்டிக் பாண்டியா தலைமையிலான டி20 தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் ஒரு நாள் தொடரின் முதல் போட்டி ஆக்லாந் மைதானத்தில் இன்று தொடங்கியது. ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், சுப்மான் கில்-லும் களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஷிகர் தவான் 72 ரன்களிலும், சுப்மான் கில் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 80 ரன்கள் விளாசிய நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்களை சேர்த்திருந்தது. நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி மற்றும் பெர்குசன் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

    இதையடுத்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிதானமாக விளையாடியது. ஆரம்பத்தில் இந்திய அணியின் வேகத்தில் தடுமாறிய நியூசிலாந்து ஃபின் ஆலன், டெவோன் கான்வே, மிட்சல் விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லாதம் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    வில்லியம்சன் மற்றும் லாதம் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் பிரிக்கமுடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர்.இறுதியில் நியூசிலாந்து 47.1 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. கேன் வில்லியம்சன் 94 மற்றும் டாம் லாதம் 145 ரன்கள் உடன் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

    Published by:Vijay R
    First published: