நேற்று அயர்லாந்து அணி இந்திய அணி எடுத்த 225 ரன்களை விரட்டி 221 ரன்கள் என்று வெற்றிக்கு மிகவும் நெருக்கமாக வந்தனர். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் உம்ரன் மாலிக்கிடம் தைரியமாகக் கொடுத்தார் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா, அவரும் கொடுத்த காரியத்தைக் கச்சிதமாக முடித்து வெற்றி பெறச் செய்தார்.
ஹர்திக் பாண்டியா அயர்லாந்து அணியின் போராடும் குணத்தை வெகுவாகப் பாராட்டித் தள்ளினார் ஹர்திக் பாண்டியா. தான் ஒரு போதும் அழுத்தத்தை உணரவில்லை என்றார் ஹர்திக் பாண்டியா.
ஹர்திக் பாண்டியா கூறும்போது, “உள்ளபடியே கூற வேண்டுமெனில் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. பிரஷர் என்பதை என்னிடமிருந்து விலக்கி வைக்கவே விரும்புகிறேன். எப்போதும் நிகழ்காலத்தில் இருக்க விரும்புகிறேன். உம்ரன் மாலிக்கிடம் ஏன் கொடுத்தேன் என்றால் அவரிடம் வேகம் உள்ளது.
அவர் வீசும் வேகத்தை அவ்வளவு சுலபமாக ஒருவர் ஹிட் செய்ய முடியாது, ஷாட்கள் ஆட முடியாது. அயர்லாந்து தங்களால் என்ன முடியும் என்பதைக் காட்டி விட்டனர். பெருமை அவர்களுக்குரியது, பிரமாதமான ஷாட்களை அயர்லாந்து வீரர்கள் ஆடினர்.
ஆனால் அதே வேளையில் நம் பவுலர்களுக்கும் பெருமை சேர வேண்டும் வெற்றி பெறச் செய்தனரே! ரசிகர்கள் ஆரவாரமாக இருந்தனர். அவர்களுக்கு பிடித்த வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் தினேஷ் கார்த்திக். உலகின் இந்தப் பகுதியில் வந்து கிரிக்கெட் ஆடுவது மகிழ்ச்சியாக உள்ளது.
தீபக் ஹூடா, உம்ரன் மாலிக் பெருமை சேர்க்கின்றனர், குழந்தையாக இருக்கும் போதே இந்தியாவுக்காக ஆட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருக்கும். கேப்டனாக முதல் தொடரை வென்றதில் மகிழ்ச்சி. ஹூடா பேட் செய்த விதத்துக்காக மகிழ்கிறேன், உம்ரன் மாலிக்கை பாராட்டுகிறேன்” என்றார் ஹர்திக் பாண்டியா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hardik Pandya, India, Ireland, T20