நெஞ்சில் உரமுமின்றி... நேர்மைத் திறமுமின்றி..- லார்ட்ஸ் தோல்வி குறித்து டேவிட் லாய்ட் புலம்பல்

இங்கிலாந்தை பயமுறுத்திய இந்தியா.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை இந்திய அணி மொத்தமாக பயமுறுத்தி விட்டது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா இப்படி மடிந்திருக்கிறது, உதாரணம் அந்த கொல்கத்தா டெஸ்ட். ராகுல் திராவிட், சச்சின் இருவரையுமே ஷோயப் அக்தர் யார்க்கரில் வீழ்த்தி, பாகிஸ்தான் வெற்றி பெறும்.

  • Share this:
    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை இந்திய அணி மொத்தமாக பயமுறுத்தி விட்டது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா இப்படி மடிந்திருக்கிறது, உதாரணம் அந்த கொல்கத்தா டெஸ்ட். ராகுல் திராவிட், சச்சின் இருவரையுமே ஷோயப் அக்தர் யார்க்கரில் வீழ்த்தி, பாகிஸ்தான் வெற்றி பெறும்.

    அதே போல் சென்னையில் அந்த பேமஸ் டெஸ்ட் போட்டியில் சச்சின் ஆட்டமிழந்தவுடன் சடுதியில் ஆட்டமிழந்து பாகிஸ்தானிடம் தோற்றது இந்தியா. அப்போது பாகிஸ்தான் இந்திய அணியை அப்படித்தான் பயமுறுத்தும், அதே போல் 1992 உலகக்கோப்பையில் வாழ்வா சாவா போட்டியில் ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் வீழ்த்திய போதும் வாசிம் அக்ரம், அகிப் ஜாவேத், போட்ட ஒரு ஸ்பெல் பயங்கரம். ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வியது.

    நிறைய உதாரணங்கள் உள்ளன. இங்கிலாந்து வேகப்புயல் பாப் வில்லிஸ், ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தி 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தோற்கடித்தது, கர்ட்லி ஆம்புரோஸ் ஒருமுறை பெர்த்தில் 1 ரன்னுக்கு 7 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளைச் சாய்த்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சர்பராஸ் நவாஸ் ஒருமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 86 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை மெல்போர்னில் சாய்த்த போது 1 ரன்னுக்கு 7 விக்கெட் கைப்பற்றினார். ஆஸ்திரேலியா 305/3 என்பதிலிருந்து 310 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆகித் தோற்றது. இவையெல்லாம் அசாத்தியமான ஸ்பெல்கள்.

    பாக். வேகப்பந்து வீச்சாளர் சர்பராஸ் நவாஸ்


    மேற்கூறியவையெல்லாம் பயமுறுத்தும் பந்து வீச்சுக்கு உதாரணங்கள். இந்திய அணி அன்று லார்ட்ஸில் 120 ரன்களுக்கு இங்கிலாந்தை சுருட்டியதும் இவற்றுக்குச் சமமானதே.

    இதைத்தான் இங்கிலாந்து வர்ணனையாளர் டேவிட் லாய்ட் கூறுகிறார், “இந்தியா இங்கிலாந்தை பயமுறுத்தியது. இங்கிலாந்து அணி மேல் கோலி முழுக்கவும் வியாபித்தார். இதை இங்கிலாந்தினால் தாங்க முடியவில்லை.

    இப்போது பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் நிச்சயம் நாம் ஆடியது சரியல்ல என்று இங்கிலாந்திடம் கூறியிருப்பார். கோலிக்கும், ரவி சாஸ்திரிக்கும் தெரியும் இங்கிலாந்தை பயமுறுத்தினால் தாங்க மாட்டார்கள் என்று. இங்கிலாந்து அணி வீரர்களின் நெஞ்சில் உரமில்லை. நேர்மைத் திறமும் இல்லை. மிகவும் பலவீனமான இதயத்துடன் ஆடினர்.

    நாமும் பாய்வோம் என்று விராட் கோலி முகத்திற்கு நேர் சொல்ல அங்கு ஆளில்லை.

    2005-ல் மைக்கேல் வானும், டங்கன் பிளெட்சரும் சேர்ந்து ஆஸ்திரேலியாவை அடிப்போம் என்றனர். நடந்தது. இப்போது அது போன்ற ஒரு தலைமைத்துவம் தேவைப்படுகிறது. லார்ட்ஸில் துணிவற்ற பலவீனமான மனநிலையில் இருந்தோம்.

    இங்கிலாந்து மீண்டெழ வாய்ப்புள்ளது, மீண்டெழுந்தாக வேண்டும். அதற்கு முதலில் அவர்கள் நல்ல அணியை தேர்வு செய்ய வேண்டும்” என்றார் டேவிட் லாய்ட்.
    Published by:Muthukumar
    First published: