Home /News /sports /

டெஸ்ட்ல நல்ல பார்ம்ல இருந்தாங்களேன்னு பார்த்தா இங்க வந்து சொதப்புறாங்க: கேப்டன் ஜாஸ் பட்லர் விரக்தி

டெஸ்ட்ல நல்ல பார்ம்ல இருந்தாங்களேன்னு பார்த்தா இங்க வந்து சொதப்புறாங்க: கேப்டன் ஜாஸ் பட்லர் விரக்தி

இங்கிலாந்து ஒருநாள் அணி கேப்டன் ஜாஸ் பட்லர்

இங்கிலாந்து ஒருநாள் அணி கேப்டன் ஜாஸ் பட்லர்

நேற்று ஓவலில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை உண்மையில் சிதைத்தது இந்திய அணி. பும்ரா பவுலிங்கில் 110 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து அணியின் ஸ்கோரை ரோஹித் சர்மா ஒரு கையில் எடுத்து முடித்து நோ-லாஸில் வென்றது இந்திய அணி.

மேலும் படிக்கவும் ...
    நேற்று ஓவலில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை உண்மையில் சிதைத்தது இந்திய அணி. பும்ரா பவுலிங்கில் 110 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து அணியின் ஸ்கோரை ரோஹித் சர்மா ஒரு கையில் எடுத்து முடித்து நோ-லாஸில் வென்றது இந்திய அணி.

    டெஸ்ட் மேட்சில் செம பார்மில் இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ஜானி பேர்ஸ்டோ, ரிவர்ஸ் ஸ்வீப், மேலேறி வந்து அடித்து பராக்கிரமத்தை காட்டிய ஜோ ரூட், இவர்களுக்கெல்லாம் மெக்கல்லம் வழியைக் காட்டிய டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் என்று அனைவரும் சொதப்பினர் என்றால் மிகையாகாது. ஆக்ரோஷம் எல்லாம் கண்டிஷனையும் பந்து வீச்சையும் பொறுத்த சார்புத்துவமாகும் (relativism). அது தனி நபர்களின் சுயார்ஜித எண்ணம் மட்டுமே அல்ல.

    3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இங்கிலாந்து தோற்றது, சரி இங்கு பேர்ஸ்டோ, ரூட், பென் ஸ்டோக்ஸ் வந்து விட்டனர், இந்தியாவுக்கு சிக்கல்தான் என்று பார்த்தால் கிரீன் டாப் டெஸ்ட் பிட்சில் மீண்டுமொரு அசாத்திய பும்ரா, ஷமி ஸ்விங்குக்கு இங்கிலாந்து 25 ஓவர்களே தாக்குப் பிடிக்க முடிந்தது, சரி 110க்கு ஆல் அவுட் ஆனது, மீண்டும் வந்து கட்டுக்கோப்புடன் வீசி இந்திய பவுலர்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டாமா?

    கொண்டு வந்து ஊர்பட்ட ஷார்ட் பிட்ச் பந்துகளைப் போட்டு அத்தனையையும் ரோஹித் சர்மா ஸ்டேடியத்துக்கு வெளுத்துக் கட்டிவிட்டார். சிந்தனையற்ற ஆக்ரோஷத்தின் பலனை இங்கிலாந்து நேற்று அனுபவித்திருக்கும். அடுத்த முறை டெஸ்ட்டில் இறங்கும்போதும் இந்த மேட்ச் கண் முன்னால வந்து போகணும்.

    இந்நிலையில் இங்கிலாந்து வெள்ளப்பந்து கேப்டன் ஜாஸ் பட்லர் ஆட்டம் முடிந்து கூறுகையில், “மிகவும் கடினமான நாள், ஜீரணிக்க கடினமான தினம். நாங்களே விரைவில் தரைமட்டமாகி விட்டோம். வானிலை மேகமூட்டமாக இருந்தது, ஆனால் ஸ்விங்கை பார்த்து மிரண்டு விட்டோம்.

    இந்தியா சூழ்நிலையை சரியாகப் பயன்படுத்தினர், பவர் ப்ளேயில் அருமையாக இந்தியர்கள் வீசினர். விவாதித்து ஒர்க் அவுட் செய்து அடுத்த போட்டியில் இறங்க வேண்டும். சில இங்கிலாந்து டெஸ்ட் வீரர்கள் வாழ்நாளின் சிறந்த பார்மில் இருந்தார்கள் என்று பார்த்தால் இங்கு வந்து எட்ஜ் ஆகி அவுட் ஆகிச் சென்று விட்டனர்.

    பும்ரா ஒரு கிரேட் பவுலர். விக்கெட்டுகளை வீழ்த்துவதற்காக ஒருவர் ஆக்ரோஷமாக வீசும்போது ஆடுவது சற்று கடினமே.” என்றார் ஜாஸ் பட்லர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, Jasprit bumrah, Rohit sharma

    அடுத்த செய்தி