‘என்ன கொடுமை சரவணன் இது?’- 9 மாதங்களில் தலைகீழாக மாறிய காட்சிகள்; கோலி-ரோஹித் அன்றும் இன்றும்
‘என்ன கொடுமை சரவணன் இது?’- 9 மாதங்களில் தலைகீழாக மாறிய காட்சிகள்; கோலி-ரோஹித் அன்றும் இன்றும்
ரோஹித் சர்மா, விராட் கோலி
அக்டோபர் 25, 2021, டி20 உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த பிறகு அப்போதைய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில், ‘ரோஹித் சர்மாவை நீக்க முடியுமா?’ என்ன பேசுகிறீர்கள்?என்று ரிப்போர்ட்டரிடம் எதிர்க்கேள்வி எழுப்பினார், 9 மாதங்களுக்குப் பிறகு நேற்று இன்றைய கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலியின் இடத்தை நியாயப்படுத்தி பேச வேண்டியதாகியது.

9 மாதங்களில் இரண்டு தூண்களின் நிலைமைகளும் இடம்மாறிப்போனது, தலைகீழாக மாறியது. இது காலத்தின் கோலம் தான். அன்றைய தினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நிருபர் ஒருவர் கேப்டன் கோலியிடம் கேட்டார், “ரோஹித் சர்மாவுக்கு பதில் இஷான் கிஷனை எடுத்திருந்தால் ரோஹித்தை விட பெட்டர் ஆக ஆடியிருப்பாரோ?” என்றார்.
அதற்குக் கோலி பதிலளிக்கையில், “இது மிகவும் தைரியமான கேள்வி. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் சார், சிறந்த அணி என்று நான் நினைத்ததை வைத்து ஆடினோம்” என்றார், அதற்கு அந்த ரிப்போர்ட்டர், ‘நான் சும்மா கேட்டேன், நான் அது பற்றி கமெண்ட் கூற மாட்டேன்’என்றார்.
அப்போது விராட் கோலி, “ரோஹித் சர்மாவை நீக்க முடியுமா? ரோஹித் சர்மாவையே நீக்கச் சொல்ல முடியுமா? கடந்த போட்டியில் அவர் என்ன செய்தார் தெரியுமா? உங்களுக்கு சர்ச்சை வேண்டுமென்றால் சொல்லுங்கள், அதற்கேற்ப நான் விடையளிக்கிறேன்” என்றார் விராட் கோலி.
அன்று அப்படி கூறிய கேப்டன் கோலி இன்று கேப்டனல்ல, அவரை தூக்க முடியுமா என்று கேட்கப்பட்ட ரோஹித் இன்று கேப்டன், அதே கேள்வி இன்று கேப்டன் ரோஹித் சர்மாவிடம் எழுப்பப்ப் பட்டது, அதற்கு ரோஹித் என்ன சொன்னார் தெரியுமா?
நேற்று அதே போல் ஒரு நிருபர், ‘கோலி பற்றி நிறைய பேசப்பட்டு வருகிறதே..’ என்று பேசி முடிப்பதற்குள் இடைமறித்த ரோஹித் சர்மா, “எதற்காக அவர் பற்றி பேசப்படுகிறது? எனக்குப் புரியவில்லை, எப்படியோ, நீங்கள் தொடருங்கள்” என்றார்.
பிறகு கோலி நீண்ட காலமாக ஆடிவருகிறார், அதிக போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். பார்ம் முன்னே பின்னே இருக்கலாம் ஆனால் அவர் கிரேட் பேட்ஸ்மேன். நமக்காக அதிக போட்டிகளில் வென்று கொடுத்தவர் கோலி, எனவே பார்முக்கு வருவதற்கு ஒன்றிரண்டு போட்டிகள் போதும். நான் இப்படித்தான் கருதுகிறேன்,மற்றவர்களும் இப்படித்தான் கருதுவதாக நினைக்கிறேன்” என்றார்.
9 மாதங்களில் காலத்தின் கோலம் என்ன? இரு பெரும் வீரர்களின் நிலைமைகளும் மாறிவிட்டது, இருவரும் ஒரே மாதிரியான கேள்விகளுக்கு ஒரே மாதிரி பதில் அளிக்கிறார்கள், ஆனால் ரசிகர்கள் வேண்டுவது ‘உண்மை’ அது கிடைக்குமா? காலம் மாறினாலும் கோலம் மாறினாலும் உண்மை மட்டும் கிடைக்காது.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.